பொதுவாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மல்டிபேக்கர் லாபம் தரும் பங்குகளில் முதலீடு செய்யவே அதிகம் விரும்புவார்கள். அப்படியொரு மல்டிபேக்கர் பங்குதான் மெர்குரி இவி டெக் நிறுவனம். இந்நிறுவனம் இரு சக்கர வாகனம் முதல் பஸ் வரையிலான இவி வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மெர்குரி இவி டெக் நிறுவனத்தின் லாபம் பெரிய அளவில் இல்லையென்றாலும் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது இந்நிறுவனத்தின் மிகப்பெரிய பலமாகும்.
ரோபோ
மெர்குரி இவி டெக் நிறுவனம் 2025ம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் தனது உற்பத்தி செயல்பாடுகளை ரோபோ மூலம் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து அன்னிய முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளை வாங்கி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வருவாய், லாபம் சூப்பர்
கடந்த டிசம்பர் காலாண்டில் மெர்குரி இவி டெக் நிறுவனம் நிகர வருவாயாக ரூ.35.60 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 677 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் மெர்குரி இவி டெக் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4.28 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காட்டிலும் 708 சதவீதம் அதிகமாகும்.
2024 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த 9 மாதங்களில் மெர்குரி இவி டெக் நிறுவனத்தின் நிகர வருவாய் 240 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.58.95 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 241 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.6.37 கோடியாக உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள்
நல்ல பங்குகளை மட்டுமே தேடி தேடி முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டாளர்கள், மெர்குரி இவி டெக் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளனர். கடந்த 2024-25ம் நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் 36.43 லட்சம் பங்குகள் வாங்கியுள்ளனர். இது இந்நிறுவனத்தில் 1.92 சதவீத பங்கு மூலதனமாகும்.
மல்டிபேக்கர் பங்கு
நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வதை 17,530 சதவீதம் பெருக்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 6,700 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மெர்குரி இவி டெக் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 235 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் மெர்குரி இவி டெக் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.42 சதவீதம் உயர்ந்து ரூ.63.47 ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,200 கோடியாக இருந்தது. 2025 மார்ச் 4ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.51.24க்கு சென்றது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
பாகிஸ்தானுக்கு என்ட் கார்டு போட இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. எகிறிய பாதுகாப்பு துறை பங்குகள் விலை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications