கடந்த மாதம் 22ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது.
லஷ்கர்-இ-தொய்பா
இந்திய ராணுவ தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் 100 தீவிரவாதிகள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், இந்திய எல்லையோர பகுதியில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அடுத்த வாரம் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இந்த கூட்டத்தில் பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான பாபா கல்யாணி கலந்து கொள்ள உள்ளார்.
பாபா கல்யாணி
செய்தியாளர்கள், பாபா கல்யாணியிடம் பாகிஸ்தானுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் உற்பத்தியை அதிகரிக்க பாதுகாப்பு துறையை மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அடுத்த வாரம் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளோம். எங்கள் குழு செல்கிறது. நான் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, ராணுவ பாதுகாப்பு ஆயுதங்களை அதிகளவில் கொள்முதல் செய்ய முடிவு செய்திருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் எதிரொலியாக இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பாதுகாப்பு துறையை சேர்ந்த பங்குகள் விலை உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பங்கு விலை 3.50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து 4,578.95 வரை சென்றது. பாராஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் பங்கு விலை 6.55 சதவீதம் அதிகரித்து ரூ.1,450 வரை உயர்ந்தது.
பாரத் டைனமிக்ஸ்
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே பாரத் டைனமிக்ஸ் (BDL) சுமார் 10 சதவீதம் உயர்ந்து ரூ.1,595 வரை சென்றது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்கு விலை சுமார் 5 சதவீதம் அதிகரித்து ரூ.321.80க்கு சென்றது. பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் பங்கு விலை 5.60 சதவீதம் அதிகரித்து ரூ.1,176.40 வரை சென்றது. 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.1.80 லட்சம் கோடி மூலதன செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயத்தில் செய்ய கூடாததை செய்த முதலீட்டாளர்கள்... சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications