இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 2வது நாளாக வியாழக்கிழமை இரவு ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதாக தகவல். அதேசமயம் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது.
தோல்வி
பாகிஸ்தான் என்னதான் முயற்சி செய்தாலும், அத்தனையும் தோல்வியும் முடிவடைந்து வருகிறது. இருப்பினும் அந்நாடு தொடர்ந்து இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சி மேற்கொண்டு வருவதால், இந்தியா கோபப்பட்டு பாகிஸ்தானை தாக்கி விடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகள் பலத்த சரிவுடன் தொடங்கியது.

சென்செக்ஸ்
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் பெரிய வீழ்ச்சியுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 1,360 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 78,968.34 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் மெல்ல சரிவிலிருந்து மீள தொடங்கியது. தற்போது, சென்செக்ஸ் நேற்றைய முடிவை காட்டிலும் சுமார் 654 புள்ளிகள் பின்தங்கி உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் மற்றும் என்டிபிசி உள்பட மொத்தம் 24 பங்குகளின் விலை குறைந்தது. குறிப்பாக, ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை கடுமையாக சரிந்தது. அதேவேளையில், டைட்டன், எல் அண்ட் டி மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதிகபட்சமாக டைட்டன் நிறுவன பங்கின் விலை சுமார் 4 சதவீதம் ஏற்றம் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில், பிஎஸ்யு வங்கி மற்றும் நுகர்வோர் சாதனங்கள் ஆகிய குறியீட்டு எண்களை தவிர்த்து மற்ற அனைத்து குறியீட்டு எண்களும் சரிவை சந்தித்தன. ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை தொடர்ந்து ஹோட்டல் பங்குகள் சரிவை சந்தித்தன. முக்கியமாக, வர்த்தகத்தின் இடையே தாமஸ் குக் (இந்தியா) லிமிடெட் (.3.48 சதவீதம்), இஐஎச் லிமிடெட் (5.45 சதவீதம்), சாலட் ஹோட்டல்ஸ் லிமிடெட் (2.32 சதவீதம்) உள்பட பல விருந்தோம்பல் துறையை சேர்ந்த பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி
நண்பகல் 12 மணி நேரப்படி, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 718 புள்ளிகள் குறைந்து 79,623 புள்ளிகளில் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 223 புள்ளிகள் குறைந்து 24,050 புள்ளிகளில் வர்த்தகமாகியது.
இந்தியாவிடம் அடிவாங்கும் பாகிஸ்தான்: சீன நிறுவனம் ஹேப்பியோ ஹேப்பி.. ஏன் தெரியுமா...?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications