மும்பை: இந்தியாவின் பிரபலமான முதலீட்டாளர்களில் ஆசிஸ் கச்சோலியாவும் ஒருவர். இதுபோல பிரபல முதலீட்டாளர்கள் தங்களது போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்கக்கூடிய நிறுவனங்களின் பங்குகள் அண்மைக்காலமாகவே கணிசமான லாபத்தை பெற்று தந்துள்ளன. அந்த வகையில் ஆசிஸ் கச்சோலியா வைத்திருக்கக் கூடிய ஒரு ரசாயன நிறுவனத்தின் பங்கு மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது.
ஃபினோடெக்ஸ்ஸ் கெமிக்கல்ஸ்(Fineotex Chemical) என்ற இரசாயன நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு கடந்த 14 மாதங்களில் மட்டும் 220 ரூபாயிலிருந்து 375 என உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 14 மாதங்களில் 70% லாபத்தை இந்த பங்கு பெற்றுத் தந்துள்ளது.

சில நிறுவனங்களின் பங்குகளை நீண்ட காலம் வைத்திருக்கும் போது அவை பல மடங்கு லாபத்தை பெற்று தர கூடும் என சொல்லப்படுவதுண்டு. அப்படி ஒரு நிறுவனம்தான் ஃபினோடெக்ஸ் கெமிக்கல்ஸ். கடந்த ஆறு மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 5% லாபத்தை பெற்று தந்தது. இதுவே 5 ஆண்டுகள் என பார்க்கும்போது வெறும் 38 ரூபாய்க்கு இருந்த ஒரு பங்கின் மதிப்பு தற்போது 375 ரூபாய் என கிட்டத்தட்ட 900% லாபத்தை தந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் பங்கு கொரோனா காலக்கட்டத்தில் வெறும் 15 ரூபாய்க்கு சரிவடைந்தது. பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து தற்போது 375 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கிட்டத்தட்ட 2400 சதவிகிதம் லாபத்தை ஈட்டி தந்துள்ளது இந்த பங்கு.
ஆசிஸ் கச்சோலியா இந்த நிறுவனத்தில் தன்னுடைய பங்குகளை மாற்றாமல் அதே எண்ணிக்கையிலேயே வைத்திருப்பதால் இதன் வளர்ச்சியும் கணிசமாக இருக்கும் என முதலீட்டாளர்கள் கணிக்கின்றனர். ஏனெனில் ஆசிஸ் கச்சோலியா இந்த நிறுவனத்தில் 31 .35 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறார். நிறுவனத்தின் மொத்த பங்குகளில் இது 2.83 சதவீதமாகும்.
ஃபினோடெக்ஸ் நிறுவன பங்கின் நிறுவனத்தின் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனம் ஆடைகளுக்கு தேவையான அனைத்து வகையான ரசாயனங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு இது மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது, 2015 ஆம் ஆண்டில் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஆடைகளுக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் கட்டுமான பணிகள், நீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ,உரங்கள் மற்றும் பெயிண்டுகளுக்கு தேவையான பல்வேறு மூலக்கூறுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது . இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 4165 கோடி ஆகும். புக் வேல்யூ 36 ஆகவும் பேஸ் வேல்யூ 2ஆகவும் உள்ளது.
2023ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 524 கோடி ரூபாயாக இருந்துள்ளது, இதில் நிறுவனத்தின் லாபம் 90 கோடி ஆகும். இந்த நிறுவனத்தின் பங்குகளில் 65 சதவீதம் புரமோட்டோர்கள் வசம் உள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் 29.82 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
Story Written by: Devika
More From GoodReturns

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications