மும்பை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவு பாதையில் இருக்கும் நிலையில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகள் மட்டும் உயர்வை கண்டுள்ளன. வேகமாக விற்பனையாகும் நுகர் பொருள்கள் அதாவது FMCG நிறுவன பங்குகள் ஜூன் 4ஆம் தேதி பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான அன்று உயர்வை கண்டன.
குறிப்பாக Hindustan Unilever நிறுவனத்தின் பங்கின் மதிப்பு ஜூன் 4ஆம் தேதி பகல் 2.30 மணி அளவில் 5.62% உயர்ந்து 2,490 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதே போல Dabur India Ltd நிறுவன பங்கும் 5.20% உயர்ந்து ஒரு பங்கின் மதிப்பு 572.90 ரூபாய்க்கு வர்த்தகமானது.

Colgate-Palmolive Ltd நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4.39% உயர்ந்து 2,805 ரூபாய்க்கு வர்த்தகமானது. Britannia Industries நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 3.16% உயர்ந்து 5,331 ரூபாய்க்கு வர்த்தகமானது. மற்ற அனைத்து துறைகளும் 10% வரை சரிவை கண்ட நிலையில் , FMCG நிறுவன பங்குகள் சராசரியாக 5% வரை உயர்ந்தன.
பாஜக அருதி பெரும்பான்மை பெறவில்லை என்ற அதிருப்தி தான் சந்தையில் எதிரொலிக்கிறது என கூறும் Geojit Financial Services நிறுவனத்தின் தலைவர் விஜய்குமார், மோடி தலைமையில் அமையும் அரசு இந்த முறை சீர்த்திருத்தங்களில் கவனம் செலுத்தாமல் , மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்தலாம் என்ற கணிப்பும் FMCG நிறுவன பங்குகள் உயர காரணம் என கூறியுள்ளார்.
Bernstein என்ற வெளிநாட்டு தரகு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும் போது நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பங்குகள் உயர்வை காணும் என கூறியுள்ளது. அதற்கு ஏற்ப தற்போது FMCG நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளன.
மேக்ரோ எக்னாமிக் வளர்ந்து வருவது, கிராமப்புறங்கள் மற்றும் மக்கள் நல திட்டங்களில் அரசு கவனம் செலுத்தும், பருவமழை முறையாக இருக்கும் என்ற கணிப்பு, சில்லறை பணவீக்கம் குறைவு என்பன உள்ளிட்டவையே FMCG நிறுவன பங்குகளை உயர்த்தியுள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications