வாகன துறையை சேர்ந்த நிறுவனம் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் வர்த்தக வாகனங்கள்,பயணிகள் வாகனங்கள் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. பங்குகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் அது முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை உருவாக்கும் இயந்திரமாக இருக்கும் என்று பலரும் சொல்ல கேட்டு இருப்போம். அதற்கு உதாரணமாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பங்கினை தைரியமாக சொல்லலாம். இந்நிறுவன பங்கின் வரலாற்றை பார்த்தாலே நமக்கு அந்த உண்மை புரியும்.
கடந்த 16 ஆண்டுகளில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு 13,024 சதவீதம் மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. 16 ஆண்டுகளுக்கு முன் ரூ.56.65 என்ற அளவில் இருந்த இப்பங்கின் விலை தற்போது ரூ.7,435ஆக உயர்ந்துள்ளது. 16 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1.31 கோடியாக பெருகியிருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 641 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 26.24 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.

அதேசமயம், கடந்த 6 மாத காலத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பங்கின் விலை 3.78 சதவீதம் சரிவு கண்டுள்ளது. 2025ம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 11.84 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 2.52 சதவீதம் அதிகரித்து 7,586.60ஆக இருந்தது. ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தது.
2024 டிசம்பர் காலாண்டில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.115.3 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 11.7 சதவீதம் அதிகமாகும். கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 11.7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,889.5 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.85.4 கோடியும், வருவாயாக ரூ.1,691.70 கோடியும் ஈட்டியிருந்தது.
Story written by: Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications