எங்களுக்கு லாபம்தான் முக்கியம்... இந்திய பங்குச் சந்தைக்கு டாடா காட்டும் அன்னிய முதலீட்டாளர்கள்

2024ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தைகளுக்கு பொன்னான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவு கண்டு வருகின்றன. ஆரம்பத்தில் இந்த சரிவை, சந்தை ஒருங்கிணைக்கிறது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது.

ஆனால் 5 மாதங்கள் தாண்டிய பிறகும் பங்குச் சந்தைகள் ஏறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. சிறப்பான மத்திய பட்ஜெட், ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தது போன்ற சாதகமான நிகழ்வுகள் நடந்தபோதிலும் இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய பங்குச் சந்தையில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.34,576 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். அதிகபட்சமாக நிதித்துறை பங்குகளை ரூ.6,991 கோடிக்கு விற்பனை செய்தனர்.அடுத்ததாக எஃப்எம்சிஜி துறையை சேர்ந்த பங்குகளை ரூ.6,904 கோடிக்கு விற்றனர். மேலும் மூலதன பொருட்கள் (ரூ.4,464 கோடி), வாகனம் (ரூ.3,969 கோடி) மற்றும் எண்ணெய் & எரிவாயு (ரூ.3,377 கோடி) போன்ற துறைகளை சேர்ந்த பங்குகளையும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர்.

எங்களுக்கு லாபம்தான் முக்கியம்...  இந்திய பங்குச் சந்தைக்கு டாடா காட்டும் அன்னிய முதலீட்டாளர்கள்

மத்திய அரசு தாக்கல் செய்த நுகர்வு சார்ந்த பட்ஜெட் மற்றும் வலுவான உள்நாட்டு பொருளாதார இன்கேட்டர்ஸ் போன்ற சாதகமான நிலவரங்கள் காணப்பட்ட போதிலும், அன்னிய முதலீட்டாளர்கள் இந்த அளவுக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இது ஒரு தற்காலிக மறுஒதுக்கீடா அல்லது ஆழமான பொருளாதார கவலைகளின் அறிகுறியா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து டெசெர்வ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வைபவ் போர்வால் கூறுகையில், குறைந்த ஏற்ற இறக்கம் மற்றும் கரன்சி அபாயத்துடன் நல்ல லாபத்தை வழங்கும் அமெரிக்க பத்திரங்கள், அன்னிய முதலீட்டாளர்களை இந்திய பங்குகளிலிருந்து விலக செய்தன.

மேலும் 3 சதவீத ரூபாய் மதிப்பு சரிவு அன்னிய முதலீட்டாளர்களின் ஆதாயத்தை குறைத்து விட்டது. இந்தியாவின் மூலதன ஆதாய வரி அதிகமாக இருக்கிறது. இது அமெரிக்கா,சீனா,பிரேசில் மற்றும் தாய்லாந்து போன்ற பிற நாட்டு சந்தைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது என்று தெரிவித்தார். ஆம்னிசயின்ஸ் கேபிட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் விகாஸ் குப்தா கூறுகையில், மூலதன பொருட்கள் மற்றும் எஃப்எம்சிஜி இரண்டும் கணிசமாக மிகைப்படுத்தப்பட்டவை.

பட்ஜெட் வரி நிவாரணத்தால் அதிகரித்த நுகர்வு திறன் இருந்தபோதிலும் எஃப்எம்சிஜி பங்குகள் விலை உயர்ந்ததாகவே உள்ளது. ஏஐ வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள் குறிப்பாக டீப்சீக்-க்கு பிறகு, இந்திய ஐடி பங்குகளை பரிசீலித்து வருகின்றனர். ஏனெனில் அவற்றின் வளர்ச்சி திறன் இன்னும் முழுமையாக மதிப்பு நிர்ணயம் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

Story written by: Subramanian

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+