இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்தது தற்போது பங்குச் சந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரிவிலிருந்து மீண்டு வர தொடங்கி உள்ளன. இருப்பினும் ஐடி துறையை சேர்ந்த பங்குகள் கடுமையான விற்பனையின் மத்தியில் உள்ளது. நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் அதன் உச்சத்தலிருந்து 26 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் போன்ற லார்ஜ் கேப் பங்குகள் முதல் எம்ஃபாசிஸ் மற்றும் பெர்சிஸ்ட் வரையிலான மிட்கேப் பங்குகளிலிருந்து அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
அன்னிய முதலீட்டாளர்கள் ஐடி பங்குகளை கை கழுவது, உச்சபட்ச அவநம்பிக்கையா அல்லது ஆழமான சரிவின் தொடக்கமா? என்று கேள்வி எழுந்துள்ளது. 2025 மார்ச் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 32.89 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2024 டிசம்பர் காலாண்டில் 33.3 சதவீதமாக இருந்தது.

இதே காலத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் தங்களது பங்கு மூலதனத்தை 12.68 சதவீதத்திலிருந்து 12.04 சதவீதமாக அன்னிய முதலீட்டாளர்கள் குறைத்துள்ளனர். எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு 19.38 சதவீதத்திலிருந்து 19.15 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோன்று எல்டிமைண்ட்ரீ, பெர்ஸ்சிண்ட்மற்றும் எம்பாசிஸ் போன்ற பிற பெரிய மற்றும் நடுத்தர நிறுவன பங்குகளிலிருந்தும் அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
அதேசமயம் விதிவிலக்காக, விப்ரோ நிறுவனத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் பணத்தை கொட்டியுள்ளனர். கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 7.81 சதவீதத்திலிருந்து 8.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியிலும் ஐடி பங்குகள் விற்பனை செய்வது நீடித்தது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய ஐடி பங்குகளில் இருந்து மேலும் ரூ.13,828 கோடியை வெளியே எடுத்தனர்.
அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்து வருவது, இந்திய ஐடி நிறுவனங்களின் லாப வரம்பை பாதிக்கும் என்பதால் இந்திய ஐடி பங்குகளில் முதலீடு செய்வது பெரிய ஆதாயத்தை அளிக்காது என்ற முடிவுக்கு அன்னிய முதலீட்டாளர்கள் வந்து இருக்கலாம் அதனால்தான் ஐடி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்கின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மார்செல்லஸில் உள்ள குவாண்டிவ் ரிசர்ச் குழுவின் தலைவர் விஆர் கிருஷ்ணன் கூறுகையில், வரி தொடர்பான பணவீக்கம் மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சி தாக்கத்தால் ஏற்படும் குறைக்கப்பட்ட விருப்பப்படி வாடிக்கையாளர் செலவினம் குறித்த கவலைகள் ஏற்கனவே ஒரளவுக்கு மதிப்பிடப்பட்டுள்ளன. ஆண்டின் இரண்டாம் பாதியில் வரியால் தூண்டப்பட்ட மந்தநிலையை அமெரிக்கா தவிர்த்தால், ஐடி பங்குகளில் மீட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
அசத்தலான நிதி முடிவுகள்.. எகிறிய எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்கு விலை.. இப்போ வாங்கலாமா?..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications