அசத்தலான நிதி முடிவுகள்.. எகிறிய எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்கு விலை.. இப்போ வாங்கலாமா?..

நாட்டின் 3வது பெரிய ஐடி நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக இருந்தது. 2025 மார்ச் காலாண்டில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிகர லாபமாக ரூ.4,307 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும்.

2025 மார்ச் காலாண்டில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.30,246 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தன் எதிரொலியாக, இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 7 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.1,589.95 வரை சென்றது.

அசத்தலான நிதி முடிவுகள்.. எகிறிய எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்கு விலை.. இப்போ வாங்கலாமா?..

எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் லாபம் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளதால், தற்போதைய சூழ்நிலையில் பங்குகளை வாங்கலாமா அல்லது விற்கலாமா அல்லது தக்கவைத்துக் கொள்ளலாமா என்பது குறித்து முடிவு எடுப்பதில் முதலீட்டாளர்கள் சிறிது குழப்பத்தில் உள்ளன. இந்த சூழ்நிலையில், எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகளை வைத்து பல தரகு நிறுவனங்கள் எச்சிஎல் டெக்னாலஜிஸின் தரமதிப்பீட்டில் மாற்றங்கள் செய்துள்ளன.

நுவாமா நிறுவனம் எச்சிஎல் டெக்னாலஜிஸ் குறித்த தனது மதிப்பீட்டை வாங்கலாம் என உயர்த்தியுள்ளது. மேலும் இலக்கு விலையை ரூ.1,700ஆக நிர்ணயம் செய்துள்ளது. பெரிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், எச்சிஎல் நிறுவனம், சக ஐடி நிறுவனங்களை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறது என்று நுவாமா தெரிவித்துள்ளது.

அதேசமயம் InCred நிறுவனம் எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்கு தனது மதிப்பீட்டை குறைத்துள்ளது. InCred நிறுவனம் எச்சிஎல் டெக்னாலஜிஸின் தரமதிப்பீட்டை "சேர்க்கலாம்" என்பதிலிருந்து "தக்கவைக்கலாம்" என்று தரமிறக்கியுள்ளது. மேலும் அதன் இலக்கு விலையை ரூ.2,021-லிருந்து ரூ.1,585ஆக குறைத்துள்ளது. வருவாய் திருத்தங்களால் ஏற்பட்ட குறைந்த அளவிலான ஏற்றம் காரணமாக தரமிறக்கப்பட்டுள்ளது. EBIT லாப விகிதம் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக இருந்தாலும், 2023 மார்ச் காலாண்டு வருவாய் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக இல்லை என்ற InCred நிறுவனம் தெரிவித்து உள்ளது.

2024 ஜூன் 4ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்கு விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.1,235ஆக இருந்தது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் காண தொடங்கியது. 2025 ஜனவரி 13ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.2,011ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.

நிஃப்டியை பீட் செய்த தங்கம்... அட இவ்வளவு லாபமா..! வியக்க வைத்த தங்க இடிஎஃப் திட்டங்கள்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+