இன்றைய தலைமுறையினர் பங்குகளில் முதலீடு செய்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதேபோல் மியூச்சுவல் பண்டுகளின் தங்க இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்வதும் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த வாரம் நம் நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சம் என்ற மைல்கல்லை தாண்டி விட்டது.
இந்த மேலோட்டமான இந்த தகவலை வைத்தே, சமீப காலத்தில் பங்குகளை காட்டிலும் தங்கமே முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்து இருக்கும் என்று நாம் முடிவுக்கு வர முடியும். ETMutualFunds நிறுவனம் அண்மையில், எஸ்ஐபி வருமான அடிப்படையில், கடந்த ஓராண்டில் தங்க இடிஎஃப்கள் மற்றும் நிப்டி இடிஎஃப்கள் இரண்டில் எது அதிக ஆதாயம் கொடுத்தது என்பது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், நிஃப்டி இடிஎஃப்களை விட தங்க இடிஎஃப்கள் கணிசமாக சிறப்பாக செயல்பட்டது உறுதியாகி உள்ளது..

பகுப்பாய்வுக்காக, எஸ்பிஐ மியூச்சுவல் பண்டின் தங்க இடிஎஃப் மற்றும் நிஃப்டி 50 இடிஎஃப் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன. ஒரு முதலீடட்டாளர் எஸ்பிஐ தங்க இடிஎஃப்-ல் மாதந்தோறும் எஸ்ஐபி ரூ.10,000 செய்திருந்தால், ஒரு வருட காலத்தில் ஆண்டு வருவாய் (நீட்டிக்கப்பட்ட உள் வருவாய் விகிதம் - XIRR) 54.35 சதவீதமாக இருந்திக்கும். அதேசமயம், எஸ்பிஐ நிஃப்டி 50 இடிஎஃப்-ல் அதே மாதிரி முதலீடு செய்து இருந்தால் ஆண்டின் முடிவில் ஆண்டு வருவாய் 2.93 சதவீதமாக மட்டுமே இருந்திருக்கும்.
எஸ்பிஐ தங்க இடிஎஃப் உள்பட 16 தங்க இடிஎஃப்கள் கடந்த ஓராண்டில் 48.32 சதவீதம் முதல் 54.85 சதவீதம் வரை வருமானம் வழங்கியுள்ளன. அதேசமயம், எஸ்பிஐ நிஃப்டி 50 இடிஎஃப் தவிர நிஃப்டி 50க்கு பெஞ்ச்மார்க் செய்யப்பட்ட 15 இடிஎஃப்கள் கடந்த ஓராண்டில் 2.87 சதவீதம் முதல் 3.03 சதவீதம் வரை மட்டுமே வருமானத்தை வழங்கியிருப்பது பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது.
டாடா மியூச்சுவல் பண்டின் கருத்துப்படி, மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, டாலர் மதிப்பு விளைவு, பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம் அழுத்தம் மற்றும் இடிஎஃப்களில் முதலீடு வரத்து போன்ற காரணங்கள் தற்போதைய தங்கம் விலை உயர்வுக்கு பின்னணியில் உள்ளன. இதே காரணங்கள் தங்க இடிஎஃப்களில் கணிசமாக முதலீடு வரவுக்கு வழிவகுத்தது என்று தெரிவித்தது.
நிஃப்டியின் புதிய ராஜா.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி லாபம்.. கலக்கும் பஜாஜ் ஃபைனான்ஸ்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications