நிஃப்டியின் புதிய ராஜா.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி லாபம்.. கலக்கும் பஜாஜ் ஃபைனான்ஸ்

டிரம்பின் பரஸ்பர வரி, வர்த்தக போர் பதற்றம் போன்ற பல சர்வதேச காரணங்களால் கடந்த அக்டோபர் முதல் தொடர்ந்து 5 மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மரண அடி வாங்கியது. ஸ்மால்கேப் முதல் லார்ஜ் கேப் பங்குகள் வரை அனைத்து பங்குகளின் விலையும் கடுமையான வீழ்ச்சி கண்டது. இவ்வளவு ரணகளத்துக்கு மத்தியில் ஒரு நிறுவன பங்கு தொடர்ந்து ஏற்றம் கண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நிறுவன பங்கு பஜாஜ் குழுமத்தை சேர்ந்த பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம்தான்.

வங்கி அல்லாத நிதி நிறுவனம் பஜாஜ் ஃபைனான்ஸ். இந்த ஆண்டில் இது வரையிலான காலத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு 36 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. இதுவரை முதலீட்டாளர்களின் செல்வத்தில் ரூ.1.5 லட்சம் கோடியை சேர்த்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.9,391.15 எட்டியதையடுத்து, இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியை நெருங்குகிறது. நிஃப்டியின் நிகரற்ற பங்குகளை வீழ்த்தி இந்த ஆண்டின் மறுக்க முடியாத நட்சத்திரமாக உருவெடுத்துள்ளது.

நிஃப்டியின் புதிய ராஜா.. முதலீட்டாளர்களுக்கு  ரூ.1.5 லட்சம் கோடி லாபம்.. கலக்கும் பஜாஜ் ஃபைனான்ஸ்

பல தரகு நிறுவனங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவன பங்கின் செயல்திறனை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டன. சில நிறுவனங்கள் யானையின் நடனம் என்று குறிப்பிட்டன. மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால், அதன் இலக்கு விலைகளை உயர்த்த தரகு நிறுவனங்கள் பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றன. சிஎல்எஸ்ஏ நிறுவனம் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கின் இலக்கு விலையாக ரூ.11,000ஆக நிர்ணயித்துள்ளது. மேலும் ஃபார்ம் தற்காலிகமானது, கிளாஸ் நிரந்தரமானது என்று பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கை பெருமையாக குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு தரகு நிறுவனமான எலாரா கேபிட்டல் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கின் இலக்கு விலையை ரூ.11,161ஆக நிர்ணயம் செய்துள்ளது. மேலும் யானை மீண்டும் ஒரு நடனமாட தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் கூறுகையில், பஜாஜ் ஃபைனான்ஸின் ஏஐ சார்ந்த செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப சார்ந்த அணுகுமுறை அதன் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும். இந்நிறுவனத்துக்கு வாங்கலாம் என்று மதிப்பீடு வழங்கப்படுகிறது மற்றும் இப்பங்கின் இலக்கு விலை ரூ.10,205ஆக மதிப்பிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

வரும் மாதங்களில்,முதலீட்டாளர்கள் பஜாஜ் ஃபைனான்ஸின் காலாண்டு செயல்திறனை உன்னிப்பாக கவனிப்பார்கள். குறிப்பாக அதிகரித்து வரும் கடன் செலவுகள் மற்றும் தனிநபர் கடன் சந்தையில் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், பங்கு விலை நியாமான மதிப்பை நெருங்கி வந்தாலும், இந்தியாவின் நிதிச் சேவை துறையில் மிகவும் ஈர்க்கக்கூடிய வளர்ச்சி கதைகளில் ஒன்றாக பஜாஜ் ஃபைனான்ஸ் தொடர்ந்து தனித்து நிற்கிறது.

வட்டியை குறைத்த பேடிஎம் மணி.... 132 சதவீதம் லாபம் கொடுத்த பேடிஎம் பங்குகள்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+