2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனை காரணமாகக் கடந்த சில நாட்களாகச் சரிவைச் சந்தித்து வந்த நிலையில் இன்று மிகவும் மோசமாக 1077 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஐரோப்பிய சந்தை சரிவு
இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் இருந்து முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து முதலீடுகளை வெளியேற்றி வந்த நிலையில், ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் இதன் அளவு மேலும் மோசமடைந்தது.
ஐரோப்பிய சந்தையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் லாக்டவுன் கட்டுப்பாடுகளும் தொடர்ந்த நடைமுறையில் இருக்கும் காரணத்தால் ஐரோப்பிய சந்தை மந்தமான வர்த்தகச் சூழ்நிலையில் உள்ளது.
முதலீட்டாளர்கள் மனநிலை
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பட்ஜெட் அறிக்கைக்கு முன் தங்களது முதலீடுகளைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கத்துடனும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடனும் அதிகளவிலான பங்குகளை இன்று விற்பனை செய்துள்ளனர்.
இதனால் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரையிலும் பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து சரிந்த காரணத்தால் அதிகப்படியாக 1077 புள்ளிகள் சரிந்து 47,269.60 புள்ளிகளை அடைந்தது. ஆனால் வர்த்தக முடிவில் சரிவின் அளவு கணிசமாக உயர்வடைந்து 937.66 புள்ளிகள் சரிவில் 47,409.93 புள்ளிகளை அடைந்தது.
நிப்டி குறியீடு
இதேபோல் நிப்டி குறியீடு வர்த்தக முடிவில் 271.40 புள்ளிகள் சரிந்து தனது வலிமையான 14,000 புள்ளிகளில் இருந்து சரிந்து 13,967.50 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதிகப்படியாக ஆக்சிஸ் வங்கி 4.05 சதவீத சரிவை அடைந்துள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎப்சி, டாக்டர் ரெட்டி, ஹெச்டிஎப்சி வங்கி, இன்டஸ்இந்த் வங்கி, டைட்டன் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்துள்ளது.
வங்கி பங்குகள் அதிகச் சரிவு
இந்நிலையில் டிசிஎஸ் 0.89%, எல் அண்ட் டி 0.12%, ஏர்டெல் 1.83%, ரிலையன்ஸ் 2.29% எனச் சந்தையின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் பெரிய அளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications