ஒரே நாளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் காலி, காரணம் ஆர்பிஐ தானா?

நிஃப்டி இன்று 282 புள்ளிகள் சரிந்து 10,316 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இது 2.6 சதவிகிதம் சரிவு. நிஃப்டியின் அனைத்து செக்டோரியல் இண்டெக்ஸ்களும் நஷ்டத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் போது, நிஃப்டி ஐடி மட்டும் பச்சையாக ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது வர்த்தகர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.

பல பரிட்சையில் தோல்வி

பல பரிட்சையில் தோல்வி

இன்று காலை கணித்திருந்த புள்ளிகளான 10420-ஐ உடைத்துக் கொண்டு நிஃப்டி மேலும் சரிவை சந்தித்து இருக்கிறது. எனவே நிஃப்டி மீண்டும் ஒரு வலுவான சப்போர்ட் எடுத்து நின்றால் தான் ஏற்றத்தைப் பற்றி யோசிக்க முடியும் என்று அனலிஸ்டுகள் சொல்கிறார்கள்.

 சென்செக்ஸ்

சென்செக்ஸ்

சென்செக்ஸ் இன்று 792 புள்ளிகள் சரிந்து 34,376 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இது 2.25 சதவிகிதம் சரிவு. சென்செக்ஸின் செக்டோரியல் இண்டெக்ஸ்களில் ஐடி, டெக்னாலஜி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் சற்று ஏற்றத்தில் வர்த்தகமாயின.

பலபரிட்சை வெற்றி

பலபரிட்சை வெற்றி

இன்று சென்செக்ஸ் 35,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு கீழே சென்றால் 34,300 அதன் அடுத்த சப்போர்ட்டாக இருக்கலாம் என்று சொன்னார்கள். தற்போது அந்த சப்போர்ட் புள்ளிகளுக்கு மேலே தான் சென்செக்ஸ் உட்கார்திருக்கிறது. உலக சந்தைகள் முழுவதும் இன்று இறக்கத்தில் தான் வர்த்தகமாயின என்பது கூடுதல் வருத்தம். உலக சந்தைகளின் சரிவுக்கு அமெரிக்க பாண்டு வட்டி விகிதம் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்ததே காரணமாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.

 பலத்த அடிவாங்கிய பங்குகள்

பலத்த அடிவாங்கிய பங்குகள்

ரிலையன்ஸ், பிபிசிஎல், ஹெச்பிசிஎல், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸிகி போன்ற பங்குகள் 06 - 20 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாயின. எண்ணெய் நிறுவனங்களான ஹெச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் தான் பெரிய பங்குகளில் மிகவும் பலத்த அடியாக 20 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த பட்டியலுக்கு முரணாக ஏற்றம் கண்ட பங்குகளும் உண்டு. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டைட்டன் கம்பெனி, பார்தி இன்ஃப்ராடெல், இண்டஸ்இந்த் பேங்க் போன்ற பெரிய பங்குகள் ஏற்றம் கண்டன.

செய்திகள்

செய்திகள்

சந்தா கோச்சாரின் பதவி விலகல் ஐசிஐசிஐ வங்கிக்கு நல்லது, மார்க் மொபியஸ் இந்தியா மீது நீண்ட கால முதலீட்டுக்கு ஓகே சொன்னது, ஆர்பிஐ வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவிகிதமாகவே நிர்ணயித்தது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிதாக 74.10 என்கிற தன் வாழ்நாள் உச்ச இறக்கத்தைத் தொட்டு வர்த்தகமாகி வருவது, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்கிற ஆர்பிஐ அறிவிப்பு, பங்குச் சந்தைகளில் 200க்கும் மேற்பட்ட தரமான பங்குகள் தன்னுடைய 52 வார இறக்கத்தில் வர்த்தகமாகி வருவது என்று சந்தையை செய்திகள் வாட்டி வதைத்துவிட்டன.

 நிஃப்டியின் நெகட்டிவ்

நிஃப்டியின் நெகட்டிவ்

நிஃப்டி 50 பங்குகளில் ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி, ஓ.என்.ஜி.சி மற்றும் ஐடிசி பங்குகள் நிஃப்டியை இறக்கத்தில் வைத்திருந்தன. இன்ஃபோசிஸ் டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டைட்டன் கம்பெனி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி போன்ற பங்குகள் நிஃப்டியின் இறக்கத்தை கட்டுப்படுத்தின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+