இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து தற்போது வரை பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் பெருமளவில் உயர்வு கண்டுள்ளன.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தற்போது வரை கணிசமான லாபத்தை பெற்று தந்த பென்னி ஸ்டாக்குகள் குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்..

கடந்த ஆறு வார காலத்தில் அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து தற்போது வரை சில பென்னி ஸ்டாக்குகள் முதலீட்டாளர்களுக்கு 100 முதல் 230 சதவீதம் வரை லாபத்தை பெற்று தந்துள்ளன.
AceEquity நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்திய பங்குச்சந்தையில் உள்ள 31 பங்குகள் 50 சதவீதம் வரை உயர்வு கண்டுள்ளன. இதில் பென்னி ஸ்டாகுகள் என பார்க்கும் போது, ஹெல்தி லைஃப் அக்ரி டெக் லிமிடெட் (Healthy Life Agritec Ltd) நிறுவனத்தின் பங்கு மதிப்பானது ஏப்ரல் 19ஆம் தேதி ரூ. 4.90 ஆக இருந்து தற்போது 252 சதவீதம் அதிகரித்து ரூ. 17.28 என உயர்ந்துள்ளது.சந்தையின் போக்குகளே தங்கள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்வுக்கு காரணம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சன்சிட்டி சிந்தெடிக்ஸ் (Suncity Synthetics) ஜோத்பூரை தலைமையிடமாக கொண்டு நைலான் மற்றும் பாலியஸ்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ரூ.7.58 இல் இருந்து ரூ. 25.17 என 232 சதவீகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜோதி இன்ஃபிராவென்ச்சர்ஸ் (Jyothi Infraventures Ltd) :இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஏப்ரல் 19ஆம் தேதி ரூ.10.12 என இருந்தது. தற்போது இதன் ஒரு பங்கு மதிப்பு ரூ.24.01 என உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தில் விற்பனை எதுவும் நடக்கவில்லை என்றும் 1.87 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ள நிலையிலும் இதன் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது.
மெர்குரி டிரேட் லிங்க்ஸ்( Mercury Trade Links Ltd: ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய போது இதன் ஒரு பங்கு மதிப்பு ரூ.4.75ஆக இருந்து தற்போது ரூ.11.40 என அதிகரித்துள்ளது.
ரேட்டன் இந்தியா பவர் ( RattanIndia Power Ltd): அண்மை காலமாக பவர் பங்குகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன. அந்த வகையில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு தேர்தல் சீசனின் தொடக்கத்தில் ரூ.8 என இருந்து தற்போது ரூ.19.15 என உயர்ந்துள்ளது.
கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் (Kothari Industrial Corporation Ltd): ஏப்ரல் 19இல் ரூ.2.87 ஆக இருந்த இதன் ஒரு பங்கின் மதிப்பு 6 வார காலத்தில் ரூ.5.87 என அதிகரித்துள்ளது.
ஐஸ்ட்ரீட் நெட்வொர்க் (iStreet Network Ltd ): ரூ.1.95 என இருந்த இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 6 வாரங்களில் மட்டும் ரூ. 4.45 என அதிகரித்துள்ளது.
இவ்வாறு ஆறு வார தேர்தல் சீசனில் உயர்ந்துள்ள நிறுவனங்களில் ரேட்டன் இந்தியா பவர் மட்டுமே 10,000 கோடி சந்தை மூலதனம் கொண்ட மிடில் கேப் பங்கு, மற்ற அனைத்துமே ஸ்மால் கேப் பங்குகள் தான்.
Story Written by: Devika
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications