இந்திய ரீடைல் சந்தையில் அனைவராலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்தைத் தடை செய்ய, அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் வாங்கிய தடை உத்தரவை ஏற்க முடியுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதனால் பியூச்சர் குரூப்-ன் வர்த்தகம் மற்றும் பங்குகளை ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்ற முடியாமல் உள்ளது. பல மாதங்கள் போராட்டத்திற்கு பின் ரிலையன்ஸ்-க்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் உள்ளது.
அமேசான் திட்டம்
இந்நிலையில் 2.69 பில்லியன் டாலர் அளவிலான கடனில் தவிக்கும் பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்ற அமேசான் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் முலம் பியூச்சர் குரூப் நிறுவன பங்குகள் இன்று 17 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல்
பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் மத்தியிலான வர்த்தகம் கிட்டதட்ட தோல்வி அடைந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், அமேசான் நிறுவனம் பியூச்சர் குரூப் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டமிட்டு அதற்கான ப்ளூபிரின்ட்-ஐ உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
17 சதவீதம் வரையில் வளர்ச்சி
இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பல வாரங்களாகச் சரிவில் இருந்த பியூச்சர் குரூப் பங்குகள் இன்று சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து சுமார் 17 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பியூச்சர் குரூப் நிறுவன கடன்
ஏற்கனவே வங்கிகள் பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடனை எப்படி வசூலிப்பது என ஆலோசனை செய்து வரும் நிலையில் அமேசான் திட்டம் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கும், கடன் கொடுத்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் நம்பிக்கை அளித்துள்ளது.
சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பு
பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குச் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பு இறுதி தடை அறிவிப்பை வெளியிட்டால், அமேசான் இந்நிறுவனத்தைக் கைப்பற்றத் தயாராகி வருவதாக, இதுகுறித்து அறிந்த அமேசான் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பியூச்சர் குரூப் நிறுவன பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் பியூச்சர் ரீடைல் பங்குகள் 10 சதவீத வரையில் உயர்ந்து அப்பர் சர்கியூட் அளவீட்டை அடைத்துப் பிரீஸ் செய்யப்பட்டது. நேற்றைய சரவில் இருந்து கணக்கிட்டால் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 21 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோலே பியூச்சர் கன்ஸ்யூமர் 17 சதவீதம், பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ் 10 சதவீதம், பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன்ஸ் 9 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
மோனோபோலி நிலை
கடந்த வாரம் பியூச்சர் குரூப் நிறுவனங்கள் 24 முதல் 26 சதவீதம் வரையில் சரிந்து இருந்த நிலையில் இன்று 17 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஒரு பக்கம் பியூச்சர் குரூப் நிறுவனத்தை அமேசான் கைப்பற்றினால் ரீடைல் சந்தையில் மோனோபோலி நிலையைப் பெரிய அளவில் குறைக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications