சென்னை: இந்தியாவின் மின் உற்பத்தி சந்தையின் முக்கிய நிறுவனமான, ஜிஇ பவர் இந்தியாவின் பங்குகள் ஏப்ரல் 4 ஆம் தேதியான இன்று 11.8% உயர்ந்து ரூ.369 என்ற உயர்வை எட்டியது.
ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து மொத்தம் ரூ.774.9 கோடிக்கு இரண்டு ஆர்டர்களை நிறுவனம் வென்றதால் இந்த உயர்வு ஏற்பட்டது.

ஜிஇ பவர் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது. இதனால் அதன் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதன் பங்கு உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த ஆர்டர்கள் ரூ.490.5 கோடி மதிப்பிலான நைக்ரி சூப்பர் அனல் மின் நிலையம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா அனல் மின் நிலையம் ஆகியவற்றுக்கான D&E, சுண்ணாம்பு அடிப்படையிலான எஃப்ஜிடிகளை இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்குவதற்காக உள்ள ஆர்டர்கள் ஆகும்.
490.5 கோடி மதிப்பிலான Nigrie Super Thermal Power Plantக்கான ஆர்டரை 33 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இதற்கிடையில், ரூ.284.4 கோடி மதிப்பிலான பினா அனல் மின் நிலையத்திற்கான ஆர்டரை 30 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
மார்ச் மாதத்தில் GE Power இரண்டு ஒப்பந்தங்களைப் பெற்றது. ஒன்று என்டிபிசி தாண்டாவிற்கு ஜெனரேட்டர் பாகங்களும், என்டிபிசி நபிநகருக்கு டர்பைன் பிளேடுகளும் ரூ.24 கோடி மதிப்பில் வழங்க வேண்டும். மற்றொரு ஒப்பந்தம் கொதிகலன் சுடும் அமைப்பை வழங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ரூ.8.75 கோடி மதிப்புடைய ஆர்டரையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 11:17 மணி நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) ஜிஇ பவர் பங்குகள் ரூ. 349.80-க்கு வர்த்தகம் செய்யப்பட்டு, முந்தைய நாளைக் காட்டிலும் 5 சதவீதம் அதிகமானது. நாளின் போது, பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இரண்டிலும் மொத்தம் 26 லட்சம் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன, இது கடந்த மாதத்தில் வர்த்தகம் செய்யப்பட்ட சராசரியான 4 லட்சம் பங்குகளை விட அதிகமாகும்.
இதுவரை இந்த ஆண்டில், GE பவர் பங்குகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன, இது நிஃப்டி 50 குறியீட்டுடன் ஒப்பிடும்போது மிகச் சிறந்த செயல்திறன் ஆகும்.
2018 ஆம் ஆண்டில் ஜிஇ பவர் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,048 ஆக இருந்தது.
2023-2024 ஆம் நிதி ஆண்டின் 4வது காலாண்டில் ஜிஇ பவர் இந்தியா நிறுவதின் லாபம் ரூ.37 லட்சம். போன வருட Q 4 காலாண்டில், இந்நிறுவனம் ரூ. 139.9 கோடி நஷ்டம் அடைந்து இருந்தது. அதன் பிறகு இதனை உணர்ந்து செலவுகளை குறைத்துக் கொண்ட பின் நிறுவனம் லாபம் அடைய தொடங்கியுள்ளது.
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications