பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழியை கேட்டு இருப்போம். அதே கொஞ்சம் மாற்றி, பொறுத்தார் கோடீஸ்வரர் ஆவார் என்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் நாம் சொல்லலாம். பொதுவாக பங்குச் சந்தையில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தால் மட்டுமே நமக்கு அபரிமிதமான வருமானம் கிடைக்கும். இதற்கு உதாரணமாக ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா லிமிடெட் நிறுவன பங்கினை சொல்லலாம். கடந்த 21 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீ்ட்டாளர்களுக்கு 19,900 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
சர்வதேச எரிசக்தி நிறுவனமான ஜிஇ வெர்னோவாவின் துணை நிறுவனம் ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா லிமிடெட். இந்நிறுவனம் மின்பரிமாற்றம் மற்றும் விநியோக உள்கட்டமைப்பில் நிபுணத்துவம் பெற்றது. பொறியியல், உற்பத்தி, திட்டமேலாண்மை மற்றும் தயாரிப்புகள் மற்றம் மின் பரிமாற்றத்திற்கான தீர்வுகளை வழங்கி வருகிறது. ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து லாபம் சம்பாதித்து வருகிறது. மேலும், நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது.

ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா லிமிடெட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.142.7 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 189 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.49.3 கோடி மட்டுமே நிகர லாபமாக ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 27.8 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,073.70 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.840 கோடி ஈட்டியிருந்தது.
கடந்த 21 ஆண்டுகளில் ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா லிமிடெட் பங்கு முதலீட்டாளர்களுக்கு 19,900 சதவீதம் மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. 21 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7 என்ற அளவில் இருந்த இந்நிறுவன பங்கின் விலை தற்போது ரூ.1,400 என்ற அளவில் உயர்ந்துள்ளது.21 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2 கோடியாக உயர்ந்திருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 1,000 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 43.60 சதவீதம் பெருக்கியுள்ளது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,385.30ஆக இருந்தது.
Story written by: Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications