சர்வதேச நிதிச் சந்தையில் கடந்த சில நாட்களாக வர்த்தக பதற்றங்கள் தணிந்து முதலீட்டுகள் சீராக வர துவங்கியிருக்கும் வேளையில் வியாழக்கிழமை முதலீட்டு சந்தையில் 3 முக்கியமான மாற்றம் நடந்தது மூலம் சாதாரண வியாழன், அதிரடி வியாழனாக மாறியது.
முதல் விஷயம், அமெரிக்க நாணயக் கொள்கையில் முக்கியமான மாற்றம் ஏற்படுத்த வேண்டிய வகையில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து, DXY குறியீடு 98.3401 ஆக 0.29% சரிந்தது. இரண்டாவது விஷயம் மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்ததால் எண்ணெய் மற்றும் தங்க விலைகள் உயர்ந்துள்ளனர். இதனால் இந்த முதலீட்டு சந்தையிலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.

அமெரிக்க டாலரின் வீழ்ச்சி: அமெரிக்க டாலர் தொடர்ந்து மதிப்பிழந்து, DXY குறியீடு 0.29% சரிந்து 98.3401 ஆக உள்ளது, கடந்த மாதத்தில் மட்டும் 2.64% வீழ்ச்சியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. வர்த்தக பதற்றங்கள் குறைந்ததால் பாதுகாப்பு நாணயமாக டாலரின் தேவை குறைந்தது. மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டி விகித உயர்வை நிறுத்தலாம் என்ற சந்தை எதிர்பார்ப்பும் டாலர் மதிப்பு குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் அபாயம் அதிகரித்து, மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கு கச்சா எண்ணெய் விநியோக சிக்கல்கள் ஏற்படும் என்ற அச்சம் அதன் விலையை உயர்த்தியுள்ளது. மோதல் தீவிரமடைந்தால், கச்சா எண்ணெய் விலையில் கூர்மையான உயர்வு ஏற்படலாம் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதேவேளையில் இன்றைய ஆசிய சந்தை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலையில் தடாலடி உயர்வு பதிவானது.
அமெரிக்கா பாக்தாத்தில் உள்ள தனது தூதரகத்தில் இருந்து அத்தியாவசியமற்ற அனைத்து ஊழியர்களையும் வெளியேற்ற தயாராகி வருகிறது என்று இரண்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் NBC நியூஸிடம் தெரிவித்தனர். இதற்கான காரணம் குறித்து அவர்கள் முழுமையாக விளக்கவில்லை. மூன்றாவது வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், "அமெரிக்கர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பாக வைத்திருக்க டிரம்ப் உறுதி கொண்டுள்ளார்" என்று கூறினார்.
அமெரிக்கா ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தவே தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியான நிலையில் காலை ஆசிய சந்தையில் பதிவான உயர்வு குறைய துவங்கியுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான எண்ணெய் விலைகள் அனைத்தும் 0.50 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவாகியுள்ளது.
தங்கம் விலை உயர்வு: புவிசார் அரசியல் பதற்றம் அதிகரிப்பு, அமெரிக்க பணவீக்கம் குறைவதற்கான அறிகுறிகள் ஆகியவை தங்க விலையை உயர்த்தியுள்ளன. உலக மக்களால் பாதுகாப்பான சொத்தாக கருதப்படும் தங்கம், உலகளாவிய அபாயங்கள் மற்றும் பெடரல் ரிசர்வின் வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்கிறது.
இன்று சர்வதேச வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 3320 டாலரில் 3374 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 880 ரூபாய் உயர்ந்து 99,280 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை பெரிய அளவில் மாற்றமில்லாமல் 1,18,900 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
கன்வேரா சிங்கப்பூர் நிறுவனத்தி மூத்த FX & மேக்ரோ எக்னாமிக் பிரிவு ஆய்வாளர் ஷியர் லீ லிம் கூறுகையில் "புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் வர்த்தக கவலைகள் டாலர் மதிப்பை அதிகம் பாதித்துள்ளது. இதே காரணத்தால் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலையும் உயர்த்தியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க மத்திய வங்கி முடிவுகள், அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் ஆகியவை தற்போது இந்திய சந்தையை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையையும் கடுமையாக பாதித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications