ஒரே வருஷத்தில் 276% லாபம் கொடுத்த சிகரெட் கம்பெனி.. காட்ஃப்ரே பிலிப்ஸ் பங்கு உங்ககிட்ட இருக்கா..?

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் நாட்டின் முன்னணி சிகரெட் மற்றும் புகையிலை உற்பத்தி நிறுவனமாகும். தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனத்தின் மிகப்பெரிய பலமாகும். பரஸ்பர வரி, புவிசார் அரசியல் பதற்றம் போன்ற சர்வதேச நிலவரங்களால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இந்திய பங்குச் சந்தைகள் தள்ளாடி வருகின்றன. பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சி கண்டன. ஆனால் விதி விலக்காக காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா பங்கின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

போட்டி நிறுவனங்கள்
இந்த ஆண்டில் இதுவரை காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவன பங்கின் விலை 63 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஐடிசி மற்றும் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை இதே காலத்தில் முறையே 12.5 சதவீதம் மற்றும் 20 சதவீதம் சரிவை சந்தித்தன.

ஒரே வருஷத்தில் 276% லாபம் கொடுத்த சிகரெட் கம்பெனி.. காட்ஃப்ரே பிலிப்ஸ் பங்கு உங்ககிட்ட இருக்கா..?

கடந்த 6ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.9,005.65ஐ எட்டியது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து ரூ.8,602.40ஆக அதிகரித்தது. 2024 மே 14ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.3,257.90க்கு சென்றது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

மல்டிபேக்கர் பங்கு
கடந்த ஓராண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 276 சதவீதம் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. 2024 மே 14ம் தேதியன்று ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று சுமார் ரூ.2.76 லட்சமாக உயர்ந்திருக்கும். மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின்படி, காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.5.274.68 கோடியும், நிகர லாபமாக ரூ.880.84 கோடியும் ஈட்டியிருந்தது.

லாபம்
கடந்த டிசம்பர் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் வருவாயாக ரூ.1,896.75 கோடியும், நிகர லாபமாக ரூ.332.33 கோடியும் ஈட்டியுள்ளது. அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருமானம் ரூ.63.92ஆக இருந்தது.

அம்பானியை காப்பாற்றிய ரிலையன்ஸ் பவர்... போட்டி போட்டு வாங்கிய முதலீட்டாளர்கள்.. எகிறிய பங்கு விலை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+