அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் நாட்டின் முன்னணி தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் மொத்தம் 5,305 மெகா வாட் செயல்பாட்டு போர்ட்ஃபோலியாவை கொண்டுள்ளது. இதில் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையமான சாசன் பவரின் 3,960 மெகா வாட் அடங்கும். கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையமாக சாசன் பவர் தொடர்ந்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
அனில் அம்பானி
கடனில் சிக்கி தவிக்கும் அனில் அம்பானிக்கு பெரிய நம்பிக்கையாக இருப்பது ரிலையன்ஸ் பவர் நிறுவனம்தான். இந்நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.126 கோடி ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.397.56 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

2025 மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,066 கோடியாக குறைந்துள்ளது. 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.2,193.85 கோடி ஈட்டியிருந்தது. இருப்பினும் கடந்த மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.2,615.15 கோடியிலிருந்து ரூ.1,998.49 கோடியாக குறைந்துள்ளது. செலவினம் குறைந்ததால் ரிலையன்ஸ் பவர் லாப பாதைக்கு திரும்பியுள்ளது.
கடன்கள்
கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,947.83 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.2,068.38 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. கடந்த 12 மாதங்களில், முதிர்வு அடைந்த கடன்களை திருப்பி செலுத்தியது உள்பட, மொத்தம் ரூ.5,338 கோடி கடன்கள் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் பவர் தெரிவித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் கடன் பங்கு விகிதம் கடந்த நிதியாண்டில் 0:88:1 ஆக மேம்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவகள் சிறப்பாக இருந்ததால், பங்குச் சந்தையில் இன்று இந்நிறுவன பங்கின் விலை மளமளவென உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 10.66 சதவீதம் உயர்ந்து ரூ.42.77 ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.17,180 கோடியாக உள்ளது.
லாபம்
2025ம் ஆண்டில் இதுவரை ரிலையன்ஸ் பவர் நிறுவன பங்கின் விலை 13.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 222 சதவீதம் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது.
யோகி அரசு கொடுத்த பெரிய ஒப்பந்தம்.. அதானி பவருக்கு அடித்த ஜாக்பாட்.. கிடுகிடுவென உயர்ந்த பங்கு விலை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications