ஏழைகளின் தங்கம்... விலை உயர்வில் தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி!

பழங்காலம் முதலே தங்கம், வெள்ளி ஆபரணங்களை மனிதர்கள் அணிந்து வருகின்றனர். அப்போது முதலே தங்கமும் வெள்ளியும் ஒரு மதிப்புமிக்க மனித உடைமைகளாக இருந்து வருகின்றன. ஆனாலும் வெள்ளியை காட்டிலும் மக்கள் தங்க ஆபரணங்களை அதிகம் விரும்பினர், விரும்புகின்றனர் மற்றும் இனியும் விரும்புவர். வெள்ளியை காட்டிலும் தங்கத்தின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. தங்கமும், வெள்ளியும் ஒரு மதிப்புமிக்க உடைமைகளாக இருந்து வருகின்றன. காலப்போக்கில் அவை மதிப்பு மிக்க சொத்தாகவும், பணவீக்கத்துக்கு எதிரான ஒரு பாதுகாப்பாகவும் மாறி விட்டன.

தங்கத்தை காட்டிலும் பல மடங்கு விலை குறைவு என்றாலும், சமீபகாலமாக வெள்ளியின் விலை உயர்வு விகிதம் தங்கத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது. உதாரணமாக கடந்த 12 மாதங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சுமார் 37 சதவீதம் உயர்ந்தன.

ஏழைகளின் தங்கம்... விலை உயர்வில் தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி!

ஆனால், கடந்த ஒரு மாத காலத்தில் வெள்ளியின் விலை 8.80 சதவீதம் அதிகரித்தது. ஆனால் இதே காலத்தில் தங்கத்தின் விலை 6.70 சதவீதம் மட்டுமே ஏற்றம் கண்டது. தற்போது ஒரு தங்கத்தின் விலை 3,080 டாலர் என்ற அளவில் உள்ளது. இதுதான் தங்க வரலாற்றில் அதிகபட்ச விலையாகும்.

ஆனால், 1980 ஜனவரி 17ம் தேதியன்று வெள்ளியின் விலை அதன் வரலாற்று உச்சத்தை எட்டியது. அப்போது ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 49.95 டாலராக இருந்தது. ஆனால் அதன் பிறகு வெள்ளியின் விலை தொடர்ந்து சரிவு கண்டது. 2011 ஏப்ரலில் வெள்ளியின் விலை 47.94 டாலரை எட்டியது. தற்போது வெள்ளியின் விலை அதன் அருகில் கூட இல்லை.

கடந்த 2024ம் ஆண்டில் தொடக்கத்தின் விலையில் வெள்ளியின் விலை குறைவாகவே இருந்தது. இருப்பினும் மே 17ம் தேதியன்று வெள்ளியின் 30 டாலரை எட்டியது. அதற்கு அடுத்த 3 நாட்களில் (மே 20) 12 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச விலையான 32.33 டாலரை தொட்டது. கடந்த அக்டோபர் 21ம் தேதியன்று ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை புதிய உச்சமான 34.20 டாலரை எட்டியது.

இருப்பினும் கடந்த டிசம்பர் 30ல் வெள்ளியின் விலை 28.65 டாலராக சரிந்தது. சரி இனி வெள்ளியின் விலை குறையும் என்றுதான் பலரும் ஆனால் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக வெள்ளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதுமுதல் இதுவரை வெள்ளியின் விலை 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போது வெள்ளியின் விலை 34.45 டாலர் என்ற அளவில் உள்ளது. 2020 மார்ச் மாதத்தில் வெள்ளியின் விலை 16 டாலராக இருந்தது. அதன்படி, பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் வெள்ளியின் விலை ஆண்டுக்கு சராசரியாக 19.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏழைகளின் தங்கம், புதிய தங்கம் என்று அழைக்கப்படும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எதனால் வெள்ளி விலை உயருகிறது என்று பார்த்தால், தங்கத்தின் விலை உயர்வுக்கு எதெல்லாம் காரணமாக இருக்கிறதோ அதெல்லாம் வெள்ளி விலை உயர்வின் பின்னணியில் உள்ளது.

இருப்பினும் வெள்ளிக்கு கூடுதலாக ஒரு காரணம் உள்ளது. மின்சார வாகனங்கள், சோலார் எனர்ஜி போன்ற புதிய தொழில்துறைகளில் வெள்ளிக்கான தேவை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் வெள்ளியின் தேவை விநியோகத்தை விட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் வெள்ளிக்கான தேவை 120 கோடி அவுன்ஸ்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி சப்ளை அல்லது விநியோகம் 105 கோடி அவுன்ஸ் என்ற அளவில் குறைவாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வெள்ளி சுரங்க உற்பத்தி 2 சதவீதம் அதிகரித்து 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.44 கோடி அவுன்ஸ்களாக இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது. என்னதான் வெள்ளி உற்பத்தி அதிகரித்தாலும் அது தேவையை விட குறைவாகவே இருக்கும். தொடர்ந்து 5வது ஆண்டாக, இந்த முரண்பாடு (உற்பத்தியை காட்டிலும் தேவை அதிகமாக இருப்பது) வெள்ளியின் விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளியின் விலை தொடர்ந்து உயருமா என்று கேட்டால், தங்கம்-வெள்ளி விகிதம் நம்பகத்தக்கது என்றால் வெள்ளி விலை உயர சாத்தியம் உள்ளது. தங்கம்-வெள்ளி விகிதம் என்பது ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்க எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவை என்பதை மதிப்பிடுகிறது. 1980களின் பிற்பகுதியில் தங்கம்-வெள்ளி விகிதம் 70:1ஆக இருந்தது. தங்கம்-வெள்ளி விகிதம் அதிகரித்தால், வெள்ளி குறைத்து மதிப்பிடப்படுகிறது அல்லது தங்கம் அதிகமாக மதிப்பிடப்படுகிறது.

இன்று தங்கம் 3,080 டாலராகவும், வெள்ளி 34.45 டாலராகவும் உள்ளது. அதன்படி, தங்கம்-வெள்ளி விகிதம் 90:1ஆக உள்ளது. விகிதம் அதன் நீண்ட கால சராசரிக்கு திரும்பினால் வெள்ளி விலை உயர வாய்ப்புள்ளது என்பதை காட்டுகிறது. அதேசமயம் விகிதம் சரிவதற்கான மற்றொரு வழி தங்கத்தின் விலை குறைவதுதான்.

வெள்ளி விலை குறைய வாய்ப்பு இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறது. வெள்ளியின் விநியோகம் அதிகரித்தால் விலை தானாக குறைய தொடங்கி விடும். மெக்சிகோ, ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் வெள்ளி சுரங்க நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

அங்கு வெள்ளி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சுரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வெள்ளி, சீனா, தைவான், தாய்லாந்து, எகிப்து மற்றும் இந்தியாவில் உள்ள நகை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆலைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. விநியோகம் அதிகரிக்கும்போது விலையில் வீழ்ச்சியை காணலாம். ஆனால் அந்த சூழ்நிலை சில ஆண்டுகளுக்கு பிறகு எற்படலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைள், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், ஈரான் விவகாரம், பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள் போன்ற தற்போதைய சூழலில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை ஆச்சரியப்பட வைக்கும் அளவில் இல்லை. போர் பதட்டம் மற்றும் நிலையற்ற தன்மை காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது.

இந்த சூழல் மாறினால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறையும். அதேசமயம் தொழில்துறையில் வெள்ளிக்கான தேவை அதிகரித்தால் வெள்ளியின் விலை ஏற்றம் காணும். தற்போது தொழில்துறையில் வெள்ளிக்கான தேவை அதிகரித்து வருகிறது, குறிப்பாக மின்சார வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், சோலார் பேனல்கள் போன்றவற்றில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதனால் வரும் ஆண்டுகளில் வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+