இந்திய நாணய சந்தையின் சனிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை ஒரு கிராமிற்கு 325 ரூபாய் உயர்ந்து 4 மாத உயர்வை அடைந்துள்ளது.
தங்கம் விலை 4 மாத உயர்வை எட்டியது மட்டும் அல்லாமல், 10 கிராம் தங்கத்தின் விலை மீண்டும் 30,000 ரூபாயை தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தக நிலை மற்றும் திருமணக் காலத்தினால் இந்தியாவில் தற்போது தீடிரெனத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அக்டோபர் 18, 2016இல் 10 கிராம் தங்கத்தின் விலை 30,325 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் 10 கிராம் தங்கத்தின் விலை 30,000 என்ற அளவைத் தாண்டி 30,175 ரூபாய் வரையில் சனிக்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் சனிக்கிழமை வர்த்தகத்தில் கிலோவிற்கு 600 ரூபாய் உயர்ந்து 43,800 ரூபாயாக உயர்ந்தது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்விற்கு முக்கியக் காரணமாக அமெரிக்க டாலரின் ஆதிக்கம் விளங்குகிறது.


Click it and Unblock the Notifications