அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் செப்டம்பர் மாதத்தில் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும், மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக இஸ்ரேல் - காசா எல்லையில் அதிகரித்து வரும் பதற்றமும் காரணமாகத் தங்க விலை திங்கள்கிழமை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. இந்த வாரம் பிற்பகுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை கூட்டத்தின் மீது தான் தற்போது ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனமும் உள்ளது.
தங்கம் விலை திங்கள்கிழமை காலை வர்த்தகத்தில் ஆசிய சந்தை வர்த்தகத்தில் சில அதிரடியான உயர்வை பதிவு செய்திருந்தது, இருப்பினும் 2,400 டாலரை எட்ட முடியாமல் தவித்து வருகிறது. உலகளாவிய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக முதலீடு செய்யும் காரணத்தால் பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கம் முதலீட்டை ஈர்க்க வாய்ப்பில்லாமல் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது.

ஆனால் இஸ்ரேலில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் 12 இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், மறுதாக்குதலை முறையாக மற்றும் சரியான நேரத்தை தீர்மானித்து நடத்த இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு அந்நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு அனுமதி அளித்தது. இந்த தாக்குதலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா லெபனான் நாட்டின் தீவிரவாத குழு ஹெஸ்புல்லாவின் செயல் எனக் குற்றம் சாட்டியது.
மறுமுனையில் அமெரிக்க மத்திய வங்கி (பெட்) செப்டம்பரில் வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கும் என்ற உறுதியான எதிர்பார்ப்புகளின் காரணமாகத் தங்கம் விலையில் எந்தவொரு வீழ்ச்சியும் இருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
இவ்விரு காரணத்தால் இன்று சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை 0025 GMT நிலவரப்படி 0.5% உயர்ந்து $2,397.65 ஆகவும், அமெரிக்கத் தங்கத்தின் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 0.7% உயர்ந்து $2,396.70 ஆகவும் உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஜூலை 30-31 அன்று கூடுகிறது மற்றும் வட்டி விகிதங்களை தற்போது 5.25%-5.50% என்ற நிலையில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்காவின் ஜூன் மாதத்தில் மெதுவான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவு, பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஆகியவை செப்டம்பரில் வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்புக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இதனால் அமெரிக்கப் பத்திர சந்தையில் இருந்தும் முதலீடுகள் அதிகப்படியாக வெளியேறி வருகிறது. இதில் கணிசமான முதலீடுகள் இஸ்ரேல் தாக்குதல் மூலம் தங்கம் மீதும் குவிய துவங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து இந்திய சந்தையில் விரைவில் அதிகரிக்கத் துவங்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 6415 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்திற்குள் மத்திய அரசின் இறக்குமதி வரி குறைப்பின் எதிரொலிகள் முழுமையாகச் சந்தை உள்வாங்கி சர்வதேசச் சந்தைக்கு இணையாக இயங்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications