வாரத்தின் முதல் நாளிலேயே பங்குகள், கச்சாப் பொருட்கள், கிரிப்டோகரன்சிகள் , தங்கம் மற்றும் வெள்ளி என அனைத்துமே சரிவை சந்தித்துள்ளன. இதனால் எதில் தான் முதலீடு செய்வது என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில், பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகங்கள் மீதான பத்திர பரிவர்த்தனை வரியை (STT) உயர்த்தும் அரசின் முடிவால் கடுமையான விற்பனை ஏற்பட்டது. இதன் காரணமாக பிப்ரவரி 1 அன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய குறியீடுகள் தலா 2% சரிந்தன. இருப்பினும், திங்கள் கிழமை அவை ஓரளவு நிலைநிறுத்தப்பட்டன.
எவ்வாறாயினும், இந்த பலவீனம் வெறும் பங்குச் சந்தையுடன் நின்றுவிடவில்லை. தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், கிரிப்டோகரன்சிகள் மற்றும் பத்திரங்கள் கூட அழுத்தத்திற்கு ஆளாயின. இது அனைத்து சொத்து வகுப்புகளிலும் பரவலான "கடன் குறைப்பு" (deleveraging) நடப்பதைக் குறிப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். பட்ஜெட்டின் தாக்கங்களை முதலீட்டாளர்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்ததால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் பெரும் ஏற்ற இறக்கத்தைக் கண்டன. அந்நிய முதலீடுகளை ஈர்க்க வலுவான நடவடிக்கைகள் இல்லாதது மற்றும் எதிர்பாராத அளவில் அதிக மொத்த கடன் வாங்கும் திட்டத்தை அரசு அறிவித்த பிறகு நிதிநிலை கணக்கீடுகள் குறித்த கவலைகள் சந்தையில் எச்சரிக்கையை ஏற்படுத்தின.

மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அஜய் மேனன் , "பலவீனமான முதலீட்டாளர் மனநிலை காரணமாக சந்தை குறுகிய காலத்தில் மந்தமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பட்ஜெட், வரவிருக்கும் காலாண்டு முடிவுகள் மற்றும் உலகளாவிய குறிப்புகள் மீது கவனம் மாறும்" என்று தெரிவித்தார்.
உலக அளவில், ஆபத்து எடுக்கும் மனப்பான்மை வெகுவாகக் குறைந்தது. MSCI-இன் வளர்ந்து வரும் சந்தைகள் குறியீடு மற்றும் வளரும் ஆசிய குறியீடு ஆகியவை தலா 3% சரிந்தன. இது நவம்பர் மாதத்திற்குப் பிறகு அவற்றின் மிகக் கடுமையான ஒருநாள் சரிவாகும். ஆசிய சந்தைகள் பெரும் இழப்புகளைச் சந்தித்தன; தென்கொரியாவின் கோஸ்பி 4% மேல் சரிந்து, தற்காலிக வர்த்தக நிறுத்தங்களைத் தூண்டியது.ஹாங்காங்கின் ஹேங்செங் 1.64% சரிந்த நிலையில், சீனாவின் CSI 300 குறியீடு 0.68% குறைந்தது. அமெரிக்க பங்குச் சந்தை பியூச்சர்ஸ்களும் பலவீனத்தைக் காட்டின. நாஸ்டாக்-100 பியூச்சர்ஸ் கிட்டத்தட்ட 1% சரிந்தது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், உலக அளவிலும் இந்தியாவிலும், பெரும் சரிவை சந்தித்தன. அமெரிக்க டாலரின் வலிமையும், வரலாற்று உச்சத்தை எட்டிய பிறகு லாப நோக்கம் கொண்ட விற்பனையும் இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாகும். ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,703 ஆக 3.3% சரிந்தது. அதே நேரத்தில், ஸ்பாட் வெள்ளி ஒரு அவுன்ஸ் $80.28 ஆக 5% சரிவை சந்தித்தது. MCX-இல் ஏப்ரல் மாதத்திற்கான தங்க பியூச்சர்ஸ் விலை 10 கிராமுக்கு ரூ 1,38,888 ஆக 6% சரிவைக் கண்டது. அதேபோல, மார்ச் மாதத்திற்கான MCX வெள்ளி பியூச்சர்ஸ் விலை கிலோவுக்கு ரூ 2,33,774 ஆக 12% சரிந்து வர்த்தகமானது.
கேடியா அட்வைசரியின் இயக்குநர் அஜய் கேடியா தெரிவிக்கையில், "தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சாதனைகளை எட்டிய பிறகு, பெரும் லாப நோக்கம் கொண்ட விற்பனையைச் சந்தித்துள்ளன. டாலரின் வலிமையும் மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது" என்று குறிப்பிட்டார். மேலும், அதிகரித்த இந்த ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் புதிய தங்கம், வெள்ளி வர்த்தகங்களைத் தவிர்க்குமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
உலகளாவிய பணப்புழக்கத்தின் எதிர்காலத்தை முதலீட்டாளர்கள் மறுபரிசீலனை செய்ததால், கிரிப்டோகரன்சிகள் அதன் சரிவு போக்கை தொடர்ந்தன. பிட்காயின் விலைகள் 4% சரிந்து $75,660 ஆகவும், எதர் விலை 10% சரிந்து $2,200 ஆகவும் குறைந்தது. இதில் நற்செய்தியாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 37 பைசா அதிகரித்து 91.56 ஆக இருந்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications