இந்திய கார்ப்ரேட் நிறுவனங்கள் மோசமான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் வேளையில் ஒரு பிரபல நகை கடை வெளியிட்டுள்ள ன் காலாண்டில் வலுவான நிதி மற்றும் செயல்பாட்டு செயல்திறனை வெளிப்படுத்தியதையடுத்து இதன் பங்குகள் சுமார் 10 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்துள்ளது.
பி.என். காட்கில் ஜுவல்லர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்றுள்ளன. இந்த பங்குகள் இன்று அதிகபட்ச விலையாக ரூ.602 எட்டி, 10 சதவீத அப்பர் சர்க்யூட் வரம்பை அடைந்தன. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.7,948 கோடியாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்த பங்கு வெறும் 3 சதவீத வருவாயை மட்டுமே ஈட்டியுள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று. இதேபோல் இன்றைய வர்த்தக முடிவில் பி.என். காட்கில் ஜுவல்லர்ஸ்6 சதவீத உயர்வுடன் 581.50 ரூபாயில் முடிந்துள்ளது.

பி.என். காட்கில் ஜுவல்லர்ஸ் மகாராஷ்டிராவின் இரண்டாவது பெரிய நகைக் கடை பிராண்டாகும். மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் 54 கடைகளும், அமெரிக்காவில் ஒரு கடையும் என மொத்தம் 55 கடைகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மற்றும் வைர நகைகள் உட்பட பலதரப்பட்ட நகைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. குறிப்பாக, மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது இந்நிறுவனத்தின் இலகுரக "லைட்ஸ்டைல்" (Litestyle) கலெக்ஷன் அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது.
ஆறாவது தலைமுறை தொழில்முனைவோரான டாக்டர் சௌரப் வித்யாத்ர காட்கில் அவர்களின் தலைமையில், இந்நிறுவனம் தனது பாரம்பரிய அனுபவத்தை நவீன வடிவமைப்புகளுடன் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களை ஈர்த்து அதிகப்படியான வர்த்தகத்தை பதிவு செய்து வருகிறது.
2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் பி.என். காட்கில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,714.5 கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,668.1 கோடியாக இருந்ததை விட 2.8 சதவீதம் அதிகமாகும். முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதே காலாண்டில், நிறுவனத்தின் EBITDA (வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தீர்வுக்கு முந்தைய வருவாய்) ரூ.122.8 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.66.2 கோடியாக இருந்ததை விட 85 சதவீதம் அதிகமாகும். மேலும், முந்தைய காலாண்டில் ரூ.109 கோடியாக இருந்த EBITDA, இக்காலாண்டில் 12.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிறுவனத்தின் நிகர லாபம் 96 சதவீதம் அதிகரித்து ரூ.69.3 கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு முதல் காலாண்டில் ரூ.35.3 கோடியாக இருந்தது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிகர லாபம் 12 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
பி.என். காட்கில் ஜுவல்லர்ஸ் ஈகாமர்ஸ் பிரிவில் சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது. இதன் வருவாய் 125.9 சதவீதம் அதிகரித்து ரூ.66.13 கோடியை எட்டியது. சில்லறை விற்பனை வருவாயும் 15.7 சதவீதம் அதிகரித்து ரூ.269.28 கோடியாக இருந்தது. ஒத்த கடைகளின் விற்பனை வளர்ச்சி (Same Store Sales Growth) 8 சதவீதமாக இருந்தது.

கார் வாங்குவதை காட்டிலும், கார் நிறுவன பங்குகளை வாங்குங்கள், தங்கம் வாங்குவதற்கு பதிலாக தங்க நகை கடை பங்குகளை வாங்குங்கள் என பல Finfluencers கூறினாலும், முதலீடு என்பது எப்போதும் உங்களுடைய முடிவாக இருக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு வருடத்திற்கு முன்பு டாடா சபாரி கார் வாங்கும் காசை டாடா மோட்டார்ஸ் பங்குகளை வாங்கியிருந்தால் இன்று 36% சரிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் பல நிறுவனங்கள் லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது. எனவே எவ்தொரு பங்குகளில் முதலீடு செய்தாலும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த பின்பு உங்களுடைய நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று முதலீடு செய்வது உத்தமம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications