மும்பை: காற்றாலை மின் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற கே பி எனர்ஜி லிமிடெட் என்ற மின் துறை சார்ந்த நிறுவனம் வரும் வாரத்தில் முதலீட்டாளர்களுக்கான ஈவுத்தொகை அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த மல்டி பேக்கர் நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் ஈவுத்தொகை தொடர்பான தகவல்களை பதிவிட்டுள்ளது.
குஜராத்தை தலைமையிடமாக கொண்ட கே பி எனர்ஜி லிமிடெட் நிறுவனம், ஏப்ரல் 22ஆம் தேதி தங்களது வாரிய குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தின் போது பங்கு முதலீட்டாளர்களுக்கான ஈவுத்தொகை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கே பி எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் ஈவுத்தொகைக்கான தேதி மற்றும் ஈவுத்தொகை ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மும்பை பங்குச்சந்தை இணையதளத்தில் உள்ள தகவல்களின் படி, கே பி எனர்ஜி லிமிடெட் நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு பங்குக்கு ரூ. 0.50 ஈவுத்தொகை வழங்கியுள்ளது. 2022இல் இந்த நிறுவனம் 0.95 என்றும், 2023இல் 0.70 என்றும் ஈவுத்தொகை வழங்கியுள்ளது.கே பி எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தை பொறுத்தவரை மும்பை பங்குச்சந்தையில் இதன் ஒரு பங்கின் மதிப்பு ஒரு மாதத்தில் 1.10% அதிகரித்துள்ளது.
அதேபோல ஆறு மாத காலத்தில் 87.96 % என இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது உயர்ந்துள்ளது. ஓராண்டு காலத்தில் என பார்க்கும்போது 474.29% லாபத்தை பெற்று தந்துள்ளது. கே பி எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3,748.60 % லாபத்தை பெற்றுள்ளனர்.
கடந்த 52 வார காலத்தில் இந்த நிறுவன பங்கின் குறைந்தபட்ச மதிப்பு 58 ரூபாயாகவும், அதிகபட்ச மதிப்பு 465 ரூபாயாகவும் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் கிட்டத்தட்ட ரூ. 2,038.83 கோடி ஆகும். கே பி எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் புக் வேல்யூ 22.70 ஆகவும், பேஸ் வேல்யூ 5ஆகவும் இருக்கிறது.
இந்நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் ஆண்டு ரூ. 442 கோடி என்ற அளவிலும், நிறுவனத்தின் வருமானம் 2023 ஆம் ஆண்டு ரூ. 44 கோடி என்ற அளவிலும் இருக்கிறது. நிறுவனத்தின் பங்குகளை பொறுத்தவரை, ப்ரோமோட்டர்கள் 44.80 % பங்குகளையும் சில்லறை முதலீட்டாளர்கள் 54.83 % பங்குகளையும் கொண்டுள்ளனர் வெளிநாட்டு நிறுவனங்கள் பூஜ்யம் 0. 37 % பங்குகளை வைத்துள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications