தங்கம் விலை தொடர்ந்து உயரும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவில் நவம்பர் மாத துவக்கத்தில் நடக்கும் தேர்தல் மற்றும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்புக்கான எதிர்பார்ப்பு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கான சாதகமான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
இதோடு மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை, இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல் ஆகியவை முதலீட்டுச் சந்தைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, இந்த நிலையில் தான் இந்திய முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் தங்கத்தை ஒரு பாதுகாப்பு முதலீட்டு இடமாகக் கருதி அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் மோதிலால் ஒஸ்வால் நிதி நிறுவனம் இந்தியத் தங்க விலை குறித்து முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை MCX சந்தையில் டிசம்பர் 5ஆம் தேதி முடியும் பியூச்சர் ஆர்டரின் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.78,500 முதல் ரூ.79,500 வரை வர்த்தகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், MCX தங்கத்தின் வர்த்தகத்தில் ரூ.79,200-78,900 என்ற ஆதரவு மட்டத்தையும், ரூ.79,700-80,000 எதிர்ப்பு மட்டத்தையும் கொண்டுள்ளது என முதலீட்டாளர்களுக்கு முக்கிய தரவுகளை முன் வைத்தார்.
இதேபோல் SMC குளோபல் செக்யூரிட்டீஸ்-ம் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.79,000- ரூ.79,500 அளவிலும், வெள்ளி விலை 1 கிலோ 98,300-99,100 அளவிலும் வர்த்தகமாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் டிசம்பர் 5-ம் தேதி முடிவடையும் MCX தங்க விலை 0.47% உயர்ந்து 10 கிராமுக்கு 79,605 ரூபாயாக வர்த்தகமாகி புதிய உச்சத்தைத் தொட்டது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரையில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறது நிபுணர்களின் கணிப்பு. மேலே குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்தும் MCX சந்தை விலை, ரீடைல் சந்தையில் விற்கப்படும் தங்கம் விலை கிடையாது.
இந்த சூழ்நிலைக்கு மத்தியில் தான் இன்று ரீடைல் சந்தையிலும், சர்வதேச ஸ்பாட் சந்தையிலும் தங்க விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை அதிகரித்ததும், உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுமே இன்றைய தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளது.
சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2,786 டாலராக உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு இந்தியாவில் அதிகரித்துள்ள தேவை ஒரு காரணமாக இருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்த நிச்சயமற்ற தன்மை போன்ற உலகளாவிய காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த விலை உயர்வின் தாக்கம் ரீடைல் சந்தையிலும் தெளிவாகத் தெரிகிறது. இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் உயர்ந்து 74,400 ரூபாயாகவும், 24 கேரட் தங்கம் விலை 710 ரூபாய் உயர்ந்து 81,160 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 520 ரூபாய் உயர்ந்து 59,520 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாயும், கிலோவுக்கு 1000 ரூபாயும் உயர்ந்து 1,09,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 28,270 ரூபாயாக வர்த்தகமாகிறது.
தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொருளாதார நிலைமை குறித்த கவலை, பணவீக்கம், மற்றும் உலகளாவிய அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள அமைதி இன்மை போன்ற காரணிகள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக மாற்றியுள்ளன.
இந்த விலை உயர்வு தங்க நகைகள் வாங்கும் பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும். ஆனால், தங்கத்தில் ஏற்கனவே முதலீடு செய்பவர்களுக்கு இது நல்ல செய்தியாகவே இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications