Historical fall in indian market. 48 stocks of nifty 50 trading in red. இந்திய வரலாற்றில் காணாத வீழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கிறது இந்திய சந்தை. நிஃப்டி 50 பங்குகளில் 48 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகம

நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா இறக்கத்தில் தான் வர்த்தகம் தொடங்கியது. அதே போல் இன்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 27 பைசா இறங்கி புதிய வாழ்நாள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. நேற்று இந்திய ரூபாய் மதிப்பு சரித்திரம் காணாத 73.34-ல் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று மீண்டும் புதிய உச்சத்தில் 73.67-க்கு வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி
இன்று காலை 9.00 மணியளவில் 10,858 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் ஆரம்பமே 166 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. நிஃப்டி 50 பங்குகளில் இரண்டு பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 48 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
சென்செக்ஸ்
சென்செக்ஸ் இன்று காலை 35922 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 530 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸின் 30 பங்குகளில் மூன்று பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ள 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. இரண்டு சந்தைகளும் தோராயமாக 1.5 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
உலக சந்தைகள்
நேற்று அமெரிக்க சந்தையான நாஸ்டாக் ஏற்றத்தில் நிறைவடைந்து இருக்கிறது. ஐரோப்பிய சந்தைகளான எஃப்.டி.எஸ்.இ 100, சி.ஏ.சி 40 போன்ற சந்தைகள் ஏற்றத்திலும், டி.ஏ.எக்ஸ் சந்தை இறக்கத்திலும் நிறைவடைந்திருக்கின்றன.
ஆசியச் சந்தைகள்
நிக்கி 225, ஸ்ரைட் டைம்ஸ், ஹேங்செங், தைய்வான் வெயிடெட், கோஸ்பி, ஜகர்தா காம்போஸைட், எஸ்.இ.டி காம்போஸைட் போன்ற அனைத்து ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
பாதாளம் தொடும் பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஐஓசி, ஐசிஐசிஐ, ஈஷர் மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதிசுஸிகி, பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற பங்குகளும் சற்று வலுவான இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
மார்க்கெட் சென்டிமென்ட்:
சென்செக்ஸ் நேற்று தான் தன்னுடைய 36,000 என்கிற மாய எண்ணிக் இருந்து சரிந்தது. இன்று மீண்டும் மற்றும் ஒரு மாய எண்ணான 35500-ல் இருந்து வர்த்தக நேர தொடக்கத்திலேயே சரிந்திருப்பதை வர்த்தகர்கள் கவனிக்க வேண்டும். இன்றைக்கு மேலும் சந்தை சரிவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications