இந்திய பங்குச் சந்தையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்த காலம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. காளையின் ஆட்டம் தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் ஈரானின் இன்றைய அறிவிப்பு மத்தியில், இந்திய மத்திய வங்கியும் ஒரு சூப்பரான முடிவை எடுத்துள்ளது. இந்த சூழலில் தான் இந்திய பங்குச் சந்தையானது வரலாற்று சிறப்புமிக்க ஏற்றம் கண்டுள்ளது. ரிசர்வ் வங்கி இன்று நடந்த கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% ஆக மாற்றமில்லாமல் தொடரும் என்று அறிவித்திருந்த நிலையில், பங்குச் சந்தையானது அதிரடியான ஏற்றத்தை கண்டு வருகிறது.
ஆர்பிஐ ஆனது வட்டியில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு வெளியான சூழலில், தற்போதைய காலத்தில் வட்டி அதிகரிக்காமல் இருப்பதே நல்ல விஷயம் தான் என்று முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில் தான் நிஃப்டி 23,900 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஒருபுறம் அமெரிக்கா ஈரான் ஒப்பந்தம் இரண்டு வாரங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையானது ஒரே நாளில் 18% வீழ்ச்சி கண்டுள்ளது. இதனிடையே ஆர்பிஐ வட்டியில் மாற்றமில்லை என்பது இந்திய சந்தைக்கு டபுள் பூஸ்ட் கொடுத்தது போல உற்சாகமடைந்து உள்ளது. இந்த சூழலில் தான் ஆரம்பத்தில் சென்செக்ஸ் 2800 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டு காணப்பட்டது. எனினும் தற்போது 2,600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டு, 77,280 ஆக காணப்படுகிறது. இதே நிஃப்டி 3.40% மேல் ஏற்றம் கண்டு 23,909 புள்ளியாகவும் காணப்படுகிறது. இதனிடையே, இந்திய ரூபாய் மதிப்பும் ஏற்றம் கண்டு வருகிறது.
தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்டு வரும் சந்தையானது, முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பிஎஸ்இ மிட்கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் 3% வரை ஏற்றத்தில் காணப்படுகிறது. இதற்கிடையில் இந்தியா விக்ஸ் குறியீடானது 20% குறைந்து 20 என்ற லெவலுக்கு கீழாக காணப்படுகிறது.
சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்றம் மத்தியில் பிஎஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம், 442.97 லட்சம் கோடி ரூபாயாக எகிறியுள்ளது. இது சில நிமிடங்களிலேயே 14.20 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இது கடந்த செவ்வாய்க்கிழமை சந்தை முடிவில் 428.77 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இது தொடர்ந்து எண்ணெய் வர்த்தகம் விரைவில் சீராகும் என்ற நம்பிக்கையின் மத்தியில், எரிபொருள் விலையும் கட்டுக்குள் வரும். இது பணவீக்கத்த்தையும் தணிக்க உதவும் என்ற நம்பிக்கையானது பிறந்துள்ளது. இது ரூபாய் மதிப்புக்கு சாதகமாகும் என்ற நிலையே காணப்படுகிறது. இதனிடையில் தான் ரூபாய் மதிப்பானது ஏற்றம் கண்டு காணப்படுகிறது. பங்குச் சந்தையும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications
