பலருக்கும் சுயமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆசை இருக்கும், ஆனால் அவர்களில் பலர் எப்படி பங்குகளை தேர்வு செய்வது, எப்படி முதலீடு செய்ய வேண்டும், எப்போது பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற அடிப்பை விஷயங்கள் தெரியாமல் இருக்கிறார்கள்.
பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிப்பதற்கான முதல் படியே நல்ல ஆதாயம் தரும் சிறந்த பங்குகளை தேர்ந்தெடுப்பதுதான். இதனை செய்ய தவறினால் முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விடும் எனவே முதலீட்டாளர் பங்குகளை தேர்வு செய்வதில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பங்குகள் தேர்வு : முதலீடு செய்வதற்கான பங்குகளை தேர்வு செய்வதற்கு, பொருளாதாரம், நிதி மற்றும் கார்ப்பரேட் சட்டம் போன்ற பரந்த அளவிலான விஷயங்கள் குறித்த அறிவு முதலீட்டாளருக்கு தேவை. இதில் பயிற்சி இல்லை என்றால், சில அடிப்படை கொள்கைகளை பங்குகளை தேர்வு செய்யும் போது பயன்படுத்தலாம். நிறுவனத்தின் வணிகத்தை புரிந்து கொள்ள வேண்டும். வருமான அறிக்கை, நிதி நிலை மற்றும் பணப்புழக்கம் போன்ற நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை தெரிந்து கொள்ளுங்க.
நிறுவன பங்குகளை பற்றிய தகவல்களை சேகரிக்க பல்வேறு ஆதாரங்களை பயன்படுத்தலாம். பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பங்குச் சந்தையின் இணையதளத்தில் பார்க்கலாம். அதில் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள், நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புகளை காணலாம். நிறுவனங்கள் தங்கள் நிதிநிலைகளை தங்கள் இணையதளங்களில் வெளியிடுகின்றன.
பங்கை தேர்வு செய்யும் போது நிறுவனத்தின் வருமானத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பு நிலை மற்றும் பணப்புழக்கங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுங்க. நிறுவனத்தின் நிதி நிலையை ஆய்வு செய்த பிறகு, அதன் மதிப்பீட்டை அதேதுறையை சேர்ந்த பிற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த மதிப்பீடுகளுடன் வலுவான இருப்புநிலை எண்கள் கொண்ட பங்கினை வாங்குவதற்கு வலுவான சூழ்நிலையை உருவாக்குகின்றன.
போர்ட்போலியோ : உங்கள் முழு பணத்தை ஒரு துறையில் மற்றும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யாமல் வெவ்வேறு துறைகளை சேர்ந்த பல நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதுதான் போர்ட்போலியோ உருவாக்குதல். ஒரு துறையில் கவனம் செலுத்துவது அல்லது உங்கள் எல்லா நிதியையும் ஒரே நிறுவனத்தில் போடுவது சரியான செயல் அல்ல.
எந்தவொரு துறைக்கும் பொருளாதார சூழல் சாதமாக இல்லாவிட்டால் அந்த துறைகளை சேர்ந்த பங்குகள் பாதிக்கும். பல துறைகளில் பல நிறுவனங்களில் முதலீடு செய்வது இது போன்ற இடர்பாடுகளில் இருந்து முதலீட்டை காப்பாற்ற உதவும். பல்வகைப்படுத்துதல மூலம் ஒருவர் உண்மையில் ஒரு பங்கு போர்ட்போலியோவை உருவாக்கிறார். அதன் ஒட்டு மொத்த வருமானம் முக்கியமானது, அதில் 1-2 பங்குகளில் ஆதாயம் கிடைக்காமல் போகும்.
காத்திருப்பு : பங்கு விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்து காத்திருப்பது கூட தவறாக போகலாம் ஏனென்றால் அந்த விலை வராமல் போகலாம். ஒருவர் பங்கின் பல விலைகளில் முதலீடு செய்வது நல்லதாக இருக்கும். அதாவது பங்குகளின் விலை குறைய குறைய வாங்கலாம்.
ஊகம் : பங்கு விலை உயரும்போது புதிய முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். சில சமயங்ளில் வணிகம் மற்றும் நிறுவனத்தின் நிதிநிலைகளை புரிந்து கொள்ளாமல் புதிய முதலீட்டாளர்கள் மந்தை மனநிலையில் செயல்படுகிறார்கள். அத்தகைய நடவடிக்கை நிதி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம். வதந்திகள் அல்லது ஊக அறிக்கைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க ஆசைப்படுவதை தவிர்க்கவும்.
பங்குகள் விற்பனை? : சில நேரங்களில் பங்குச் சந்தைகள் நீண்ட காலத்திற்கு சீராக இருக்கும், மற்ற நேரங்களில் அது மிகவும் நிலையற்றதாக இருக்கும் பங்குகளை விற்பனை செய்யும் உங்கள் முடிவு, குறுகிய கால சந்தை நகர்வுகளின் அடிப்படையில் இருக்கக் கூடாது.
அந்த நிறுவனத்தின் நிதி மற்றும் வணிகங்கள் உட்பட்ட அடிப்படை விஷயங்களில் எந்தவித எதிர்மறையான மாற்றம் இல்லையென்றால் அந்த பங்குகளை விற்பனை செய்யாமல தொடந்து வைத்துக் கொள்ளலாம். பங்குகளில் முதலீடு செய்யும் போது ஆபத்து இயல்பாகவே உள்ளது.
எனவே பங்கு விலை கணிசமாக சரிவதை காணும் அபாயத்தை தாங்கி கொள்ள முடியும். சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள பணத்தின் ஒரு பகுதியை கையில் வைத்திருங்கள். உங்கள் பங்கு சிறப்பாக செயல்பட்டால், லாப நோக்கில் விற்பனை செய்வது மோசமான யோசனையாக இருக்காது.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications