டிரம்பின் வரி விதிப்பு கொள்கை உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால் சமீபகாலமாக இந்திய பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன.பங்குச் சந்தைகளின் சரிவால் முதலீட்டாளர்கள் கடுமையான இழப்பை சந்தித்தனர். இந்நிலையில் தற்போது பங்குச் சந்தைகளில் மெல்ல மீட்சி காண தொடங்கியுள்ளன. தற்போது பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைவாக இருப்பதால் அதனை முதலீட்டாளர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
முன்னணி தரகு நிறுவனமான எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ், விரைவில் நல்ல ஏற்றம் காண வாய்ப்புள்ள 5 நிறுவன பங்குகளை பரிந்துரை செய்துள்ளது. அந்த பங்குகளை பார்ப்போம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
சில்லரை விற்பனையில் மறுமலர்ச்சி, புதிய எரிசக்தி வணிகம் மற்றும் டிஜிட்டல் உந்துதல் உள்பட இந்த ஆண்டு பல வினையூக்கிகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் காணப்படுகிறது என்று எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. தற்போதைய இப்பங்கின் விலை ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டுக்கான புள்ளியே வழங்குகின்றன. இப்பங்கின் இலக்கு விலையை ரூ.1,590ஆக நிர்ணயம் செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,239.90ஆக இருந்தது.
டிவிஎஸ் மோட்டார்
2024 செப்டம்பர் முதல் டிவிஎஸ் மோட்டார் பங்கு விலை 20 சதவீதம் குறைந்துள்ளது. கிராமப்புற தேவை மீட்சி மற்றும் புதிய அறிமுகங்கள் வாயிலாக இந்நிறுவனம் லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. இது குறுகிய காலத்தில் சந்தை பங்களிப்பை பாதுகாக்க இந்நிறுவனத்துக்கு உதவும். இப்பங்கின் இலக்கு விலையை ரூ2,800ஆக எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ் நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.2,583.45ஆக இருந்தது.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ்
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வலுவான கடன் தரம் அதன் ப்ளஸ் பாயிண்ட் என்றும், அது நடுத்தர முதல் உய டீன் நிர்வகிக்கும் சொத்து மதிப்பை வழங்கும் என்றும் எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ் எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி சாராத நிதி நிறுவனங்களில் இநநிறுவனம் ஒரு சிறந்த நம்பிக்கைக்குரிய தேர்வாக உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.810ஆக கணிக்கப்பட்டுள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.672.80ஆக இருந்தது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியின் சிறந்த கடன் தரம், நிலையான வருவாய் மற்றும் வலுவான லாபம் ஆகியவற்றுக்காக தரகு நிறுவனம் இந்த பங்கை பரிந்துரை செய்கிறது. எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.1,610ஆக நிர்ணயித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,349.40ஆக இருந்தது.
அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன்
அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நீண்டகால பிரதிநிதி என்று அந்நிறுவனத்தை எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ் பெருமையாக குறிப்பிடுகிறது. தரகு நிறுவனம் இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,600ஆக கணித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,210.80ஆக இருந்தது.
லாபத்தை கொட்டி கொடுக்கும்.. இந்த 10 பங்குகள் உங்க போர்ட்ஃபோலியாவில் இருக்கா?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications