எச்டிஎஃப்சி வங்கி நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். பங்குச் சந்தை வரலாற்றில் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் ரூ.15 லட்சம் கோடியை எட்டிய மூன்றாவது நிறுவனம் என்ற பெருமையை எச்டிஎஃப்சி வங்கி பெற்றுள்ளது. இது பெருமைப்பட, பாராட்டப்பட மற்றும் சந்தோஷப்பட விஷயம் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. அதேசமயம் எச்டிஎஃப்சி வங்கிக்கு சத்தமில்லாமல் ஒரு போட்டியாளர் விஸ்வரூபவம் எடுத்து வருவதை முதலீட்டாளர்கள் அமைதியாக பார்த்து வருகின்றனர்.
2023ல் எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் எச்டிஎஃப்சி வங்கி இணைக்கப்பட்டது முதல், ஐசிஐசிஐ வங்கியின் வளர்ச்சி பாதை பாதித்தது. தற்போது அந்த சவால்களை கடந்து கம்பீரமாக ஐசிஐசிஐ வங்கி முன்னேற்றம் கண்டு வருகிறது. எச்டிஎஃப்சி வங்கிக்கு டஃப் கொடுக்கும் அந்த போட்டியாளர் ஐசிஐசிஐ வங்கி. சமீபகாலமாக கிட்டத்தட்ட அனைத்து முக்கிய அளவீடுகளிலும் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியை ஐசிஐசிஐ வங்கி ஓவர்டேக் செய்து வருகிறது.

உதாரணமாக கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் எச்டிஎஃப்சி வங்கியின் லாப வளர்ச்சி 11 சதவீதம் மட்டுமே. நிகர வட்டி லாபவரம்பிலும் எச்டிஎஃப்சி வங்கியை (3.65 சதவீதம்) காட்டிலும் ஐசிஐசிஐ வங்கி முன்னணியில் (4.441 சதவீதம்) உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் வழங்கிய கடன் மற்றும் திரட்டிய டெபாசிட்டில் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் எச்டிஎஃப்சி வங்கி இந்த இரண்டிலும் பின்தங்கி உள்ளது.
கடந்த நிதியாண்டு இறுதி நிலவரப்படி, எச்டிஎஃப்சி வங்கியின் கடன்-வைப்பு விகிதம் (எல்டிஆர்) 96.5 சதவீதமாக உள்ளது. இதனால் டெபாசிட்டை அதிகரிக்க அல்லது கடன் வழங்குவதை குறைக்க தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொள்கிறது. ஆனால் ஐசிஐசிஐ வங்கியின் எல்டிஆர் விகிதம் 82.4 சதவீதமாகத்தான் உள்ளது. எல்டிஆர் என்பது ஒரு வங்கி அதன் வைப்புத்தொகையில் பெரும் பகுதியை கடன் கொடுப்பதைக் குறிக்கும். டெபாசிட்தாரர்கள் தங்கள் நிதியை விரைவாக திரும்ப பெற்றால் வங்கியின் பணப்புழக்கத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
பங்கு அடிப்படையில் பார்த்தாலும் எச்டிஎஃப்சி வங்கியை காட்டிலும் ஐசிஐசிஐ வங்கி முன்னணியில் உள்ளது. உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியின் பங்கு மூலதன மூலமான வருமானம் (RoE) தற்போது 17.4 சதவீதமாக உள்ளது. இது எச்டிஎஃப்சி வங்கியின் 14.39 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும். ஐசிஐசிஐ வங்கியின் சொத்து மீதான வருமானம் (RoA) 2.2 சதவீதமாகும்.
இந்த இரண்டு பங்குகள் குறித்து நிபுணர்கள் ஒரு கூறுகையில், எச்டிஎஃப்சி வங்கி கட்டமைப்பு ரீதியாக வலுவான நிறுவனமாக தொடர்ந்தாலும், ஐசிஐசிஐ வங்கியின் சிறந்த மூலதன திறன் மற்றும் கூர்மையான செயல்படுத்தல் குறுகிய மற்றும் நடுத்தர காலததில் அது மிகவும் சாதகமான தேர்வாக இருக்கும். வங்கி துறை தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் தங்களது இடர்பாட்டை ஏற்றுக்கொள்ளும் அளவு மற்றும் கால வரம்பை ஆகியவற்றை பொறுத்து இந்த இரண்டு வங்கிகளையும் முதலீட்டாளர்கள பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இப்போ நேரம் சரியில்லை... எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் திடீர் முடிவு.. முதலீட்டாளர்கள் ஏமாற்றம்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications