தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் நுகர்வோர் எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனம் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா. எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்கும் எண்ணத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஐபிஓ மேற்கொள்வதற்கு செபியிடமிருந்து ஒப்புதல் பெற்றது.
ஐபிஓ மூலம் சுமார் ரூ.15,000 கோடி திரட்ட எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா திட்டமிட்டு இருந்தது. மேலும் ஐபிஓவுக்கான புதிய வரை அறிக்கையை அடுத்த மாதம் செபியிடம் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் ஐபிஓ பணிகளை தற்காலிகமாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுத்தி வைத்துள்ளது.

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது ஐபிஓ தொடர்பான ஆலோசகர்களிடம், இந்திய பிரிவின் ஐபிஓவை ஒத்திவைக்கக்கூடும். சந்தை நிலைமைகள் மேம்பட்டால் அதில் (ஐபிஓ) மீண்டும் பணிகளை தொடங்க முடிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் ஐபிஓ விரைவில் நடக்கும் என்று எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐபிஓ செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கட்டத்தில் ஐபிஓ வெளியிடும் நேரம் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. தற்சமயம் ஐபிஓ வெளியீட்டை நிறுத்தி வைத்து இருப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவது பொருத்தமாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.
இந்திய பங்குச் சந்தைகள் நிலவரம் தற்போது ஏற்ற இறக்கமாக இருப்பது உள்நாட்டு மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏதர் எனர்ஜி அதன் புதிய பங்கு விற்பனை அளவை 15 சதவீதம் குறைத்து, அதன் இலக்கு மதிப்பீட்டை 44 சதவீதம் குறைக்க வழிவகுத்தது. இந்த நேரத்தில் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது புதிய பங்கு வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
2024 செப்டம்பரில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு கடந்த அக்டோபர் முதல் கடந்த பிப்ரவரி வரையிலான 5 மாதங்களும் பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்தன. தற்சமயம் இந்திய பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீள தொடங்கியுள்ளன. இருப்பினும் சந்தை நிலவரம் உறுதியான நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. சந்தை நிலவரம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால், எல்ஐி எலக்ட்ரானிக்ஸ் தனது இந்திய நிறுவனத்தின் ஐபிஓவை நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய பங்கு சந்தைகள் சரிவிலிருந்து முழுமையாக மீண்டு ஏற்றம் காண தொடங்கி விட்டால், எல்ஐி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா உள்பட பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை நம்பிக்கையுடன் மேற்கொள்ள தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சளைக்காமல் கடன் வாங்கும் அதானி குழுமம்.. கவுதம் அதானி போடும் மாஸ்டர் பிளான்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications