நாட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தை தரகு நிறுவனம் க்ரோவ். இந்நிறுவனம் நீண்ட காலமாக புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி திரட்ட திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தியிடம் (செபி) ஐபிஓ வெளியிட அனுமதி வேண்டி ரகசிய தாக்கல் வழியில் வரைவு ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது.
செபி
இந்நிறுவனம் ஐபிஓ மூலம் 70 முதல் 100 கோடி டாலர் வரை திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செபி, குரோவ் நிறுவனத்தின் ஐபிஓ குறித்து 2 முதல் 3 மாதங்களுக்குள் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரோவ் நிறுவனம் தனது ஐபிஓ நிர்வகிக்க ஜேபி மோர்கன் இந்தியா பிரைவேட் லிமிடெட், கோடக் மகிந்திரா கேபிட்டல் கம்பெனி லிமிடெட், சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட் பிரைவேட் லிமிடெட், ஆக்சிஸ் கேபிட்டல் லிமிடெட் மற்றும் மோதிலால் ஓஸ்வால் செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நியமித்துள்ளது.
அமெரிக்க நிறுவனம்
க்ரோவ் நிறுவனம் ஐபிஓவுக்கு முந்தைய நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 30 கோடி டாலர் மதிப்பிலான சீரிஸ் எஃப் நிதி திரட்டும் சுற்றில், அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிறவனமான ஐகானிக் கேபிட்டல் 15 கோடி டாலரை முதலீடு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 15ம் தேதியன்று சிங்கப்பூரை சேர்ந்த ஜிஐசி, க்ரோவில் முதலீடு செய்ய அனுமதி வேண்டி இந்திய போட்டி ஆணையத்திடம் விண்ணப்பம் தாக்கல் செய்தது. ஐகானிக் நிறுவனமும் க்ரோவில் முதலீடு செய்ய அனுமதி வேண்டி விரைவில் இந்திய போட்டி ஆணையத்திடம் விண்ணப்பம் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வேகமாக
2016ல் தொடங்கப்பட்ட க்ரோவ் நிறுவனம், 2024-25ம் நிதியாண்டில் நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் சில்லரை தரகு தளமாக வளர்ச்சி கண்டுள்ளது. 2025 மார்ச் நிலவரப்படி, க்ரோவ் நிறுவனம் 26 சதவீதத்திற்கும் அதிகமான சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. மேலும், க்ரோவ் நிறுவனம் சுமார் 1.3 கோடி செயலில் உள்ள முதலீட்டாளர்களை கொண்டுள்ளது. இது ஜெரோதா (78 லட்சம்) மற்றும் ஏஞ்சல் ஒன் (75 லட்சம்) ஆகிய நிறுவனங்களை காட்டிலும் அதிகமாகும்.
2030ல் தங்கம் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா..? இப்போ எவ்வளவு வாங்க முடியுமோ வாங்கிகோங்க..!!
கடந்த 2023-24ம் நிதியாண்டில் ஒட்டு மொத்த அளவில் க்ரோவ் நிறுவனத்தின் வருவாய் இரு மடங்கு அதிகரித்து ரூ.3,145 கோடியாக உயர்ந்துள்ளது. அந்த நிதியாண்டில் க்ரோவ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த செயல்பாட்டு லாபம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.535 கோடியாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications