இந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இடையில் சில நாட்கள் குறைந்தாலும் அது அது நீடிக்கவில்லை. இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏற தொடங்கி அடிக்கடி விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போது 1 கிராம் (24 காரட்) தங்கத்தின் ரூ.9,800 என்ற அளவில் உள்ளது. இதனால் சாமானிய மக்கள் பலரும் தங்கம் வாங்குவதை ஒத்திவைத்துள்ளனர்.
ஒரு அவுன்ஸ்
விலை கொஞ்சம் குறைந்தால் வாங்கலாம் என்ற யோசனையில் பெரும்பாலான மக்கள் உள்ளனர். ஆனால் தற்போது வரும் செய்திகள் எல்லாம் தங்கம் விலை குறையும் என்று கொஞ்சம் கூட கனவு காணாதீர்கள் என்று சொல்வது போல் இருக்கிறது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,300 டாலருக்கு மேல் உள்ளது. ஆனால் நடுத்தர கால அளவில் தங்கத்தின் விலை 4,000 முதல் 5,000 டாலர் வரை உயரக்கூடும். 2030ம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தங்கத்தின் விலை 8,900 டாலரை எட்டும்.

பணவீக்கம் அதிகரிப்பு, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயரக்கூடும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. கோல்ட் வி டிரஸ்ட் ரிப்போர்ட் 2025 அறிக்கையில், 4,800 முதல் 8,900 டாலர் வரையிலான கணிப்பு பாதை, அடுத்த ஐந்து ஆண்டுகள் பணவீக்கம் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை பொறுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கி
கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை குறைந்து, இந்த ஆண்டு அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி குறைப்புகள் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளபோதிலும், பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
ஜேபி மோர்கன் நிறுவனம் அண்மையில், 2029ம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 6.000 டாலரை எட்டும் என்று கணித்துள்ளது. இது 80 சதவீத அதிகரிப்பை குறிக்கிறது. இது தங்கத்திற்கான நம்பிக்கையான கணிப்புகளை வலுப்படுத்துகிறது.
ஏற்ற இறக்கம்
தங்கத்தின் தற்போதைய நேர்மறையான போக்கு தற்காலிகமானது அல்ல, ஆனால் முதலீட்டாளர்களிடமிருந்து தீவிர பரிசீலனைக்கு உரிய ஒரு நீண்டகால இயக்கத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இருப்பினும் தங்கத்தின் சிறப்பியல்பு விலை ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் விலை சரிசெய்தல்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
அதேசமயம், சர்வதேச சந்தைகள் மற்றும் பேமிலி ஆபிஸ், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு தங்கள் முதலீடுகளில் ஒரு சதவீதத்தை மட்டுமே ஒதுக்கின்றன. மேலும் கலை, பழங்கால பொருட்கள் மற்றறும் உள்கட்டமைப்பு போன்ற சிறப்பு முதலீடுகளுடன் அதை வைக்கின்றன என்று அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையை புரட்டி போட்ட விபத்து.. வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுத்த சோமேட்டோ ஊழியர்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications