மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் சந்தையில் எந்த மாற்றம் இருந்தாலும் இவை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை பெற்று தரும்.
இப்படிப்பட்ட பங்குகளை முதலீட்டு நிபுணர்கள் புல்லட் ப்ரூப்(Bullet Proof) பங்குகள் என அழைக்கின்றனர். அந்த வகையில் இந்திய பங்குச்சந்தையில் புல்லட் ப்ரூப் பங்குகள் என அறியப்படுபவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (reliance industries)மற்றும் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்(pidilite industries) பங்குகள்.

கடந்த 10 ஆண்டு காலத்தில் அதாவது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 566% உயர்ந்துள்ளது. பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 476 % உயர்வு கண்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி ஒரு பங்கின் மதிப்பு 400.72 ரூபாய் என இருந்தது. அதுவே தற்போது 2915 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை சந்தை மூலதனம் என்பது 19.89 லட்சம் ரூபாயாக உள்ளது. நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ 10 என்ற அளவிலும், புக் வேல்யூ 1172.80 என்ற அளவிலும் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 50 சதவீதம் புரமோட்டோர்கள் வசமே இருக்கிறது. 2023 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 8.89 லட்சம் கோடி ரூபாய் ஆகும். லாபம் 73,670 கோடி ரூபாய் ஆகும். கடந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த பங்கு 122 % லாபத்தை பெற்று தந்துள்ளது.
அடுத்ததாக பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பொறுத்தவரைக்கும் ஒரு பங்கின் மதிப்பானது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 543 ரூபாய் என்ற அளவில் இருந்தது தற்போது 3,167 ரூபாய் என உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 154% லாபத்தை பெற்று தந்துள்ளது.
இந்த நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ 1, புக் வேல்யூ 165.3. இந்தியாவின் புல்லட் ப்ரூப் பங்குகளாக அறியப்படக்கூடிய இந்நிறுவனத்தின் பங்கு, அரசு பல்வேறு திட்டங்களுக்கு செலவிடுவது மற்றும் கிராமப்புற பொருளாதாரம் மீண்டு வந்திருப்பது ஆகிய காரணங்களால் வளர்ச்சிகாணும் என ஷேர்கான் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கட்டுமான தொழில்களில் இந்நிறுவன தயாரிப்புகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் வலுவான பிராண்ட் வேல்யூ மற்றும் அவர்களின் சந்தைப்படுத்துதல் திறன் ஆகியவற்றின் காரணமாக இதன் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும் என்றும் ஷேர்கான் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்ற நிலைப்பாட்டில் வைத்திருப்பதாக ஷேர்கான் நிறுவனம் கூறியுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications