குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஐஎஃப்எல் எண்டர்பிரைசஸ். இந்நிறுவனம் வேளாள் பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பங்குகள், கடன் பத்திரங்கள் போன்ற நிதி தொடர்பான கருவிகளையும் வர்த்தகம் செய்கிறது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இல்லை. ஏனென்றால் இந்நிறுவனத்தின் லாபம் ஈட்டும் திறன் நிலையாக இல்லாததே இதற்கு காரணம். பென்னி பங்கான ஐஎஃப்எல் எண்டர்பிரைசஸ், பங்குச் சந்தையில் நேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அப்பர் சர்க்கியூட்
மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஐஎஃப்எல் எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கின் விலை 19 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து அப்பர் சர்க்கியூட் அடித்து ரூ.0.99ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் கணிப்புகளை காட்டிலும் அதிபுதிரியாக இருந்ததே இதற்கு காரணம். கடந்த 28ம் தேதியன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு ஐஎஃப்எல் எண்டர்பிரைசஸ் தனது மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது.

ஐஎஃப்எல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3.04 கோடி ஈட்டியுள்ளது. 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.67.87 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.72.13 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 36 மடங்குக்கும் அதிகமாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1.98 கோடி ஈட்டியிருந்தது.
வருவாய்
ஐஎஃப்எல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.120.60 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 13 மடங்குக்கும் அதிகமாகும். 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.8.24 கோடி ஈட்டியிருந்தது.
2024-25ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.2.99 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 254 சதவீதம் அதிகமாகும். 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.84.5 லட்சம் ஈட்டியிருந்தது. 2024 ஜூனில் இந்நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்காக உரிமை பங்கு வெளியீடு வாயிலாக வெற்றிகரமாக ரூ.49.53 கோடி திரட்டியது.
சரிவு
கடந்த ஒராண்டில் ஐஎஃப்எல் எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்துள்ளது. மே 29ம் தேதி வரையிலான கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலை 52 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 2024 ஜூன் 3ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1.82ஐ எட்டியது.
ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டது. கடந்த மார்ச் 28ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.0.59க்கு சென்றது. நடப்பு மே மாதத்தில் 28ம் தேதி வரை இப்பங்கின் விலை 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதிரடியாக உயர்ந்த தங்க விலை.. வங்கிகளுக்கு பறந்த தங்க நகைகள்.. தாராளமாக கடன் கொடுத்த வங்கிகள்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications