அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் விடுதலை தினமான ஏப்ரல் 2ம் தேதியன்று, இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் என்ற அச்சம் அதிகரித்தது. அதனை உறுதி செய்வது போல், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு பொருட்களுக்கு சீனா 34 சதவீதம் வரி விதித்தது. இது தவிர ஜேஎல்ஆர் நிறுவனம் தனது சொகுசு கார்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது.
டிரம்பின் வரி விதிப்பால் அந்நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பயம் மற்றும் வர்த்தக போர் வெடிக்கும் என்ற அபாயம் போன்ற காரணங்களால் சர்வதேச பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. இந்திய பங்குச் சந்தைகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. கடந்த 3ம் தேதி முதல் இன்று வரையிலான 3 வர்ததக தினங்களில் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக இன்று இந்திய பங்குச் சந்தைகளுக்கு ஒரு மோசமான நாளாக அமைந்து விட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 5.27 சதவீதம் அல்லது 3,939.68 புள்ளிகள் குறைந்தது. பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது.

டிரம்பின் பரஸ்பர வரி அறிவிப்புக்கு பிறகு, கடந்த 3ம் தேதி முதல் இன்று வரையிலான 3 வர்த்தக தினங்களில், சென்செக்ஸ் 5,167.50 புள்ளிகளும், நிஃப்டி 1,573.95 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதே காலத்தில் (3 தினங்களில்) மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.26.96 லட்சம் கோடி குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸில் அதிக பங்களிப்பை கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் டிசிஎஸ் ஆகிய 3 நிறுவன பங்குகளின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே நாட்டின் அதிக மதிப்பு கொண்ட நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 4.3 சதவீதம் குறைந்தது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.69,489 கோடி குறைந்தது. நா்ட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி பங்கின் விலை 3.6 சதவீதம் குறைந்தது, இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.50,466 கோடி குறைந்தது. நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் பங்கின் விலை 4.1 சதவீதம் சரிந்தது, இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.49,332 கோடி வீழ்ச்சி கண்டது.
டிரம்புக்கு பதிலடி கொடுத்த JLR... அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் சோகம்..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications