இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. கடந்த மாதம் 22ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது.
தீவிரவாதிகள் பலி
இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் 100 தீவிரவாதிகள் பலியாகினர். இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன்கள், விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் அவற்றை எல்லாம் இந்திய ராணுவம் முறியடித்தது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் கடந்த வாரம் பங்குச் சந்தைகள் பின்னடைவை சந்தித்தன.

இந்நிலையில், இந்திய ராணுவ தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் கடந்த சனிக்கிழமையன்று வெள்ளைக் கொடியை காட்டியது. போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு இந்தியாவும் ஒப்புக்கொண்டது. இதனால் ஆசிய பகுதியில் போர் பதற்றம் தணிந்தது. இதன் தாக்கம் திங்கட்கிழமை பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்கா-சீனா
இது தவிர, அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் சிறிய முன்னேற்றம் தென்பட்டுள்ளது. இதனால் சர்வதேச வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் குறைந்துள்ளது. இதுவும் பங்குச் சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எதிர்பார்த்தனர்.
எதிர்பார்த்தது போலவே, இன்றைய பங்கு வர்த்தகத்தில் அவற்றின் தாக்கம் எதிரொலித்தது. இன்று காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியபோது, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 1,350 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் சன்பார்மா நிறுவன பங்கினை தவிர்த்து இதர 29 நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தகத்தின் இடையே 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 24,600 புள்ளிகளை கடந்தது. போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே இன்று மதியம் 12 மணி அளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் வெளிவந்தால், அதுவும் பங்குச் சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
டாடா ஸ்டீல், ஏதர் எனர்ஜி, ரேமண்ட், தாமஸ் குக், ஜேஎம் பைனான்சியல் கேர் ரேட்டிங்ஸ் மற்றும் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் உள்பட சுமார் 80 நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. இன்றைய பங்கு வர்த்தகத்தில் இந்நிறுவன பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்துவர்.
மியூச்சுவல் ஃபண்டில் SIP-ல் முதலீடு செய்ய போறீங்களா?.. உங்களுக்கான டாப் 5 மியூச்சுவல் ஃபண்டுகள்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications