சம்வத் 2081 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சிறப்பு வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு வர்த்தகம் துவங்கி 20 நிமிடத்தில் அதிகப்படியாக 80,023.75 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி 24,368.25 புள்ளிகளை அடைந்துள்ளது இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் சம்வத் 2080 ஆண்டு, இந்திய பங்குச் சந்தைக்கு வரலாற்றுச் சாதனை ஆண்டாக அமைந்ததுள்ளது எத்தனை பேருக்குத் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் இந்து நாள்காட்டியில் தீபாவளி திருநாள் கடைசி நாளாக உள்ளது. இப்படிப் போன தீபாவளிக்கும் இந்த தீபாவளிக்கும் மத்தியில் பங்குச்சந்தையில் என்ன நடந்துள்ளது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

நிஃப்டி குறியீடு சம்வத் 2080ஆம் ஆண்டை 25% உயர்வுடன் நிறைவு செய்தது. மேலும் பல பங்குகள் பன்மடங்கு லாபத்தை வழங்கியுள்ளது மூலம் பல முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபத்தைப் பதிவு செய்துள்ளனர். சம்வத் 2080 ஆம் ஆண்டில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து பங்குகளின் மொத்த சந்தை மூலதனம் ரூ. 128 லட்சம் கோடி அல்லது சுமார் $1.5 டிரில்லியன் அதிகரித்துள்ளது.
இந்த மெகா வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருந்தது வலுவான நிறுவன லாப அளவீடுகள், நாட்டின் வர்த்தக வளர்ச்சியை உறுதி செய்யும் GST வசூல் அளவின் உயர்வு, Capex சுழற்சி தொடர்ந்து அதிகரிப்பு, பருவமழை நிலைமைகள் மற்றும் உள்நாட்டு தேவை அதிகரிப்பு ஆகியவை பெரிய அளவில் உதவியுள்ளது.
கூடுதலாக, மியூச்சவல் பண்டில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்துள்ளது. இதே காலகட்டத்தில், அமெரிக்கப் பங்குச் சந்தைகள் 27% முதல் 35% வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த ஆண்டில், NSE குறியீட்டில் முதலீடு செய்வோர் அளவீடு 20 கோடி கடந்ததுள்ளது. மியூச்சவல் பண்ட் துறையின் முதலீட்டுச் சொத்து மதிப்பு சுமார் ரூ.68 லட்சம் கோடியை எட்டியது. மாதாந்திர SIP முதலீட்டு அளவு ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.
இந்த சம்வத் ஆண்டில் பெரிய பாடம் என்னவென்றால், புல் சந்தையில் அடுத்தகட்ட வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதுதான். சிறிய லாபங்களைப் பதிவு செய்தவர்களுக்கு மீண்டும் நுழையும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று Pace 360 இணை நிறுவனர் மற்றும் தலைமை உலகளாவிய மூலோசனையாளர் அமித் கோயல் கூறினார்.
சம்வத் 2081-ல் எப்படி இருக்கும் என்பதை பார்த்தால், இந்திய பங்குகளின் நீண்ட கால வளர்ச்சிக்கு வலுவாக வாய்ப்புகள் இருந்தாலும், தற்போதைய பங்கு மதிப்பீடுகள் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு மிகவும் குறைந்த வாய்ப்பையை அளிக்கின்றன.
பஜாஜ் புரோக்கிங் நிறுவனம், தீபாவளி 2025 க்குள் நிஃப்டி 28,400 என்ற அளவை தொடும் என்று எதிர்பார்க்கிறது. இந்தியாவின் பிரபல புரோக்கிங் நிறுவனம் அனைத்தும் 2081 ஆம் ஆண்டில் நிதி, நுகர்வு, தொழில்துறை, EMS, தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை முதலீடு செய்ய ஏற்ற துறைகளாக அடையாளம் கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications