பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்திய ராணுவ வலிமையை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக 2025 மே 7ம் தேதி முதல் பாதுகாப்பு பங்குகளில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் கூடுதலாக ஆர்வம் காட்டினர். இதன் எதிரொலியாக, கடந்த 7 முதல் 20ம் தேதி வரையிலான காலத்தில், நிப்டி இந்தியா பாதுகாப்பு இன்டெக்ஸ் 15 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது. இதே காலத்தில் நிப்டி 50 இன்டெக்ஸ் 1.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டது.
மேக் இன் இந்தியா
பாதுகாப்பு துறை அளவுகோலின் 18 பங்குகளில் 11 பங்குகள் 15 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. மேக் இன் இந்தியா போன்ற அரசா்க முயற்சிகள் மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்பு பட்ஜெட்டுகள் இந்த வளர்ச்சியை தூண்டுகின்றன.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் உபகரணங்களின் விகிதத்தை பார்ப்பதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு தன்னிறைவை அளவிட முடியும். தற்போது இந்தியா 65 சதவீத பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது. இது முந்தைய 65-70 சதவீத இறக்குமதி சார்ந்திருப்பிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
பாதுகாப்பு கையகப்படுத்துதல் நடைமுறை, தாராளமயமாக்கப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை, உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடங்களின் மேம்பாடு மற்றும் தொழில்துறை உரிமை செயல்முறையை எளிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் வாயிலாக இத்துறையை அரசு ஆதரிக்கிறது.
ராணுவ பட்ஜெட்
2013-14ம் நிதியாண்டில் ராணுவ பட்ஜெட் ரூ.2.53 லட்சம் கோடியாக இருந்தது. இது 2025-26ம் நிதியாண்டில் ரூ.6.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு, கொள்கை ஆதரவு, தனியார் பங்கேற்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆகியவற்றுடன் இணைந்து நாட்டின் ராணுவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. 2023-24ம் நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தி ரூ..1.27 லட்சம் கோடியை எட்டியது. இது 2013-14ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 174 சதவீதம் வளர்ச்சியாகும்.
அதேசமயம், 2013-14 முதல் 2024-25க்கு இடையில் பாதுகாப்பு ஏற்றுமதி 34 மடங்கு அதிகரித்துள்ளது. 2029ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு உற்பத்தியில் ரூ.3 லட்சம் கோடியையும், பாதுகாப்பு ஏற்றுமதியில் ரூ.50,000 கோடியையும் எட்டுவதை இந்தியா இலக்காக கொண்டுள்ளது என்று பிஐபி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவிசார் அரசியல்
மாறும் புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இந்தியாவின் பாதுகாப்பு செலவு அதிகரிக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு பட்ஜெட் ஆண்டுக்கு தோறும் 7-8 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 13,000 டாலர்கள் கூடுதலாக கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என்று நுவாமா தெரிவித்துள்ளது.
கப்பல் கட்டும் தளங்கள் பிரிவில் வலுவான வளர்ச்சிக்கு வாய்ப்புகள் உள்ளன. நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டில் ரூ.2.12 லட்சம் கோடிக்கு மதிப்புள்ள (நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடற்படை போர்க்கப்பல்கள் உள்பட) பெரிய ஆர்டர்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று நுவாமா மேலும் தெரிவித்துள்ளது.
வருவாய்
இந்த துறை இதுவரை ஆரோக்கியமான வருவாயை பதிவு செய்துள்ளன. 2025 மே 19ம் தேதி நிலவரப்படி. நிஃப்டி இந்தியா டிபென்ஸ் இன்டெக்ஸில் உள்ள 18 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 4.3 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. பாதுகாப்பு துறை பங்குகளில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் டேட்டா பேட்டன்ஸ் (இந்தியா) ஆகிய பங்குகள் குறித்த ஆய்வாளர்களின் பரிந்துரை பார்ப்போம்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குகளை வாங்கலாம் என்று 18 ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதேசமயம் வைத்திருக்கலாம் என்று ஒருவரும், விற்கலாம் என்று 2 பேரும் பரிந்துரை செய்துள்ளனர். ஆய்வாளர்களில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குகளை வாங்கலாம் என்று 15 பேரும், விற்கலாம் என்று ஒருவரும் தெரிவித்தனர். டேட்டா பேட்டன்ஸ் பங்குகளை வாங்கலாம் என்று 4 ஆய்வாளர்களும், வைத்திருக்கலாம் என்று 2 ஆய்வாளர்களும் தெரிவித்தனர்.
பணத்தை ரெடியா வைச்சுக்கோங்க.. விட்டா கிடைக்காது.. இந்த வாரம் வருது 9 ஐபிஓக்கள்...
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications