இந்திய பங்கு சந்தைகள் கடந்த இரண்டு சந்தை அமர்வுகளாகவே புராபிட் புக்கிங் காரணமாக பலத்த சரிவினைக் கண்டன. எனினும் இன்று மீண்டும் ஏற்றப் பாதையில் தொடங்கியுள்ளது.
இன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 131.62 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 48,695.89 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 52.40 புள்ளிகள் அதிகரித்து 14,333.70 ஆகவும் இருந்தது.
இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தினை கண்டுள்ளது.
இந்திய பங்கு சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக சென்செக்ஸ் 359.64 புள்ளிகள் அதிகரித்து, 48,923.90 ஆகவும், இதே நிஃப்டி 100.10 புள்ளிகள் அதிகரித்து, 14,381.40 புள்ளிகளாகவும் தொடங்கியது. இதற்கிடையில் 999 பங்குகள் ஏற்றத்திலும், 232 பங்குகள் சரிவிலும், 28 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. பொதுவாக சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டாலும், சந்தை தொடர்ந்து வலுவான ஏற்றத்தினையே கண்டு வருகிறது.
சரிவுக்கு என்ன காரணம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தைகளும் இன்று சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளன. அதோடு நாளை அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பிடன், அமெரிக்காவின் மூன்றாம் கட்ட ஊக்கத்தொகை குறித்தான முக்கிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலருக்கு சாதகமாக உள்ளது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில் அனைத்தும் பச்சை நிறத்திலேயே உள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கிரசிம், , டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, எஸ்பிஐ லைஃப் இன்ஃப்ரா, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, ஐடிசி, எம் &எம், ஹெச்டிஎஃப்சி வங்கி, பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், லார்சன், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எம் &எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 518.72 புள்ளிகள் அதிகரித்து, 49,091.48 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 151.65 புள்ளிகள் குறைந்து, 14,432.95 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது முந்தைய அமர்வில்73.28 ரூபாயாக முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று தொடக்கத்தில் 11 பைசா அதிகரித்து, 73.17 ரூபாயாக தொடங்கியுள்ளது.
இனி கவனிக்க வேண்டியவை
வரவிருக்கும் பட்ஜெட், சர்வதேச சந்தை காரணமாகவும் சந்தை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். நல்ல பொருளாதார வளர்ச்சி காரணமாக கடந்த 11 வாரங்களில் சந்தை நன்கு ஏற்றம் கண்டது. எனினும் குறுகிய கால திருத்தம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால சந்தையில் ஏற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications