இந்திய சந்தைகள் இன்று பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இது கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்றே ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில்ல் இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இது ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. இதன் காரணமாக வட்டி விகிதத்தில் இன்னும் சிறிது காலத்திற்கு மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் வங்கி பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன. மேலும் மெட்டல்ஸ் உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகளும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.
சந்தையில் தொடக்கம்
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 92.13 புள்ளிகள் அதிகரித்து, 58,557.55 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 38.20 புள்ளிகள அதிகரித்து, 17,508 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
இதனையடுத்து சென்செக்ஸ் 202.10 புள்ளிகள் அதிகரித்து, 58,851.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 57.40 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இதனையடுத்து 1409 பங்குகள் ஏற்றத்திலும், 359 பங்குகள் சரிவிலும், 73 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
பெரும்பாலான குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக் பேங்க் நிஃப்டி 1% மேலாக சரிவில் காணப்படுகின்றது. நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்தேகேர், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் யுபிஎல், ரிலையன்ஸ், பிபிசிஎல், கோல் இந்தியா, ஐஓசி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டைட்டன் நிறுவனம், டிசிஎஸ், ஹெச்.சி.எல் டெக், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ், லார்சன், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டிசிஎஸ், டைட்டன் நிறுவனம், ஹெச்.சி.எல் டெக், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
10.38 மணி நிலரப்படி, சென்செக்ஸ் 252.04 புள்ளிகள் குறைந்து, 58,397.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 76.65 புள்ளிகள் குறைந்து, 17,393.10 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமின்றி 75.45 ரூபாயாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்விலும் 75.45 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications