வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று இந்திய சந்தைகள் புதிய உச்சத்தில் முடிவடைந்தன. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று இந்திய சந்தைகள் புதிய உச்சத்தில் முடிவடைந்தன. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
குறிப்பாக ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 122.87 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 47,476 ஆகவும், இதே நிஃப்டி 9.20 புள்ளிகள் அதிகரித்து 13,882 ஆகவும் காணப்பட்டது.
அதனை தொடர்ந்து தொடக்கத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 225.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 47,579.05 ஆக தொடங்கியது. இதே தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 65.80 புள்ளிகள் அதிகரித்து 13,939 ஆக தொடங்கியுள்ளது. இதனையடுத்து 1073 பங்குகள் ஏற்றத்திலும், 240 பங்குகள் சரிவிலும், 44 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் உள்ள பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், நிஃப்டி பிஎஸ்இ தவிர மற்ற குறியீடுகள் அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்சிஎல் டெக், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், பவர் கிரிட் கார்ப், ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே என்டிபிசி, பவர் கிரிட் கார்ப், நெஸ்டில், ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.
சர்வதேச சந்தையின் எதிரொலி மற்றும் அன்னிய முதலீடுகள் வரத்து, ஆசிய சந்தைகள் ஏற்றம் என பல காரணங்களினால் சந்தை ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 354.96 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 47,708.71 ஆக தொடங்கியது. இதே தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 93.15 புள்ளிகள் அதிகரித்து 13,966 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.82 ரூபாயாகவும் காணப்படுகிறது.