ரூபாய் நிலவரம் கலவரம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஓரளவுக்கு தற்போது நிலையாகவே வர்த்தகமாகி வரும் நிலையில் இருக்கிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் ஸ்பாட் விலை மதிப்பு 71.46-க்கு வர்த்தகமாகிறது. நிரந்தர வில்லனான டாலர் விலை தற்போது நிலை கொண்டிருந்தாலும், சந்தை இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி இறக்கம்
இன்று காலை 11.25 மணியளவில் நிஃப்டி 10,571 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கி 85 புள்ளிகள் இறக்கம் கண்டு இந்த புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்கள் பார்மா, பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், ரியாலிட்டி நிறுவனங்கள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. நிஃப்டியின் 50 பங்குகளில் 29 பங்குகள் இறக்கத்திலும், 21 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன.
சென்செக்ஸ்
சென்செக்ஸ் இன்று காலை 11.25 மணிக்கு 358 புள்ளிகள் சரிந்து 35116.22 க்கு வர்த்தகமாகி வருகிறது. தற்போது சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ள 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்த
கமாகி வருகின்றன. இருப்பினும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெரிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாவதால் சென்செக்ஸ் இறக்கத்திலேயே வர்த்தகமாகிறது. சென்செக்ஸின் துறை சார்ந்த இண்டெக்ஸ்களில் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஹெல்த்கேர், எண்ணெய் மற்றும் கேஸ், பொதுத்துறை நிறுவனங்கள், டெலிகாம் மற்றும் ரியாலிட்டி துறை சார்ந்த பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
பங்குகளின் பரிதாப நிலை
இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் மஹ்நிதிரா, ஜி எண்டர்டெயின்மெண்ட், ரிலையன்ஸ் போன்ற முன்னனி நிறுவனங்களே இன்று இறக்கத்தில் தான் வர்த்தகமாகின்றன. குறிப்பாக ஐடி துறை சார்ந்த பங்குகள்
சந்தைச் செய்திகள்
கொஞ்சமாக கச்சா எண்ணெய் விலை தேறி வருவது, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரி ஒரு பெரிய வழக்கில் வெற்றி பெற்றாது, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கொஞ்சம் மெதுவாகத் தான் வளருமென சி எல் எஸ் ஏ நிறுவனம் கணித்திருப்பது என்று செய்திகள் சந்தையை கொஞ்சம் அசைக்கத் தான் செய்கின்றன.
என்ன சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்
இப்போது சந்தை தன் வலுவான சப்போர்ட் புள்ளியாக 10500 எடுத்து வர்த்தகம் நடக்கிறது. ஏற்கனவே இருந்த 10600 என்கிற சப்போர்ட் புள்ளி உடைந்து கீழே வந்திருப்பதால், 10500 சற்று வலுவான சப்போர்ட்டாக இருக்கலாம். அப்படி 10500 என்கிற சப்போர்டும் உடையும் பட்சத்தில் நிஃப்டி மேலும் சரிய வாய்ப்புள்ளது எனச் சொல்கிறார்கள்.
உலக சந்தைகள்
ஆசியாவில் சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ் மற்றும் சீனாவின் ஷாங்காய் காம்போஸைட் தவிர மற்ற எல்லா சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகின்றன. எந்த ஒரு ஆசிய சந்தையும் ஒரு சதவிகித இஅறக்கத்துக்கு மேல் காணவில்லை. நேற்று ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் இறகக்த்திலேயே வர்த்தகம் நிறை வடைந்திருக்கின்றன. அமெரிக்க சந்தைகள் கூட நேற்றைய வர்த்தகத்தில் இறக்கம் கண்டு முடிந்திருக்கிறது என்பதும் கவனிக்கத் தகக்து.


Click it and Unblock the Notifications