இன்று சந்தை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்தே இந்திய சந்தைகள், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது
நிஃப்டி
இன்று காலை 10,460க்கு வர்த்தகமாகத் தொடங்கிய சந்தை நேரடியாக 291 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டி50-ல் பட்டியலிடப்பட்டிருக்கும் 50 பங்குகளில் ஓஎன்.ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியல் மற்றும் ஐஓசி தவிர ஆகிய மூன்று பங்குகள் தவிர மற்ற பங்குகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி50-ன் பஜாஜ் ஃபைனான்ஸ் இந்தியா புல் ஹவுசிங் பஜாஜ் ஃபின் சர்வ் போன்ற பங்குகள் 6.5 சதவிகிதத்துக்கும் கீழ் வர்த்தகமாகி வருகின்றன.
சென்செக்ஸ்
இன்று காலை 34,760 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய சந்தை நேரடியாக 900 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸில் பட்டியலிடபட்டிருக்கு 30 பங்குகளீல் ஓஎஞிசி தவிர மற்ற பங்குகள் அனைத்தும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. அதிகபட்சமாக ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, யெஸ் பேங்க் போன்ற பங்குகள் 3.9 சதவிகிதத்துக்கு மேல் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.
ரூபாய்
எற்கனவே சொன்னது போல அமெரிக்க கருவூல பாண்டுகளில் வட்டி விகித உயர்வு, ஜப்பானுக்கு நிகரான டாலர் மதிப்பு அதிகரிப்பு போன்ற செய்திகளின் தாக்கம் இன்னும் சில தினங்களாவது இந்திய ரூபாய் மதிப்பை குறைக்கும் என்று பார்த்திருந்தோம், அதன் தொடர்ச்சியாக இன்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.46 க்கு இறங்கி வர்த்தகம் ஆகி வருகிறது. நேற்று கரன்ஸி வர்த்தக நேர முடிவில் 74.20க்கு நிறைவடைந்த வர்த்தகம், இன்று வர்த்தக நேர தொடக்கத்திலேயே 10 பைசா உயர்ந்தே வர்த்தகமானது. தற்போது மீண்டும் தன் வாழ்நாள் புதிய இறக்கத்தைப் பதிவுச் செய்திருக்கிறது ரூபா
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள்
நேற்று அமெரிக்க சந்தைகள் சுமாராக நான்கு சதவிகிதம் இறக்கம் கண்டது உலக அளவில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அமெரிக்காவைத் தொடர்ந்து லண்டன், ஜெர்மனி, ஐரோப்பிய சந்தை போன்ற மேற்கத்திய சந்தைகள் 1.3 சதவிகிதம் தொடங்கி 2.26 சதவிகிதம் வரை இறக்கத்தில் நிறை வடைந்திருக்கின்றனா.
ஆசிய சந்தைகள்
ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், தைய்வான், கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா போன்ற அனைத்து ஆசிய சந்தைகளூம் சுமாராக 1.7 முதல் 6.7 சதவிகிதம் வரை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்த பயத்தால் தான் இந்திய சந்தைகளும் வர்த்தகம் தொடங்கும் நேரத்திலேயே இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications