கடந்த சில வருடங்களாக, குறிப்பாக மோடி பிரதமர் ஆன பின்பு இந்திய சந்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சந்தையாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வரலாறு காணாத லாபத்தை அள்ளியுள்ளனர்.
மோடி தலைமையிலான அரசின் மேக் இன் இந்தியா, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுத் தடை, ஜிஎஸ்டி அடுத்தடுத்துத் திட்டங்கள் பன்னாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் கவர்ந்தது.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர் மதிப்பு அளவில் உயர்ந்து எலைட் கிளப் பட்டியலில் முதல் முறையாக நுழைந்துள்ளது.
சீனா-வுடன் போட்டி
ஏற்கனவே எலைட் கிளப்-இல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரிட்டன், ஐரோப்பா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்திய பங்குச்சந்தை இப்பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் சீனாவை அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. சீனாவை விட இந்தியாவிற்குத் தற்போது வளர்ச்சி அடைய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், இந்தியா சீனாவுடன் நேரடியாகப் போட்டி போட்டு வருகிறது.
கொஞ்சம் சீப்புதான்..
மேலும் சந்தை மூலதனம் மற்றும் ஜிடிபி அளவீடுகள் இடையே செய்யப்பட்டும் கணக்கீட்டில் இந்திய சந்தைக்கு 0.88 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம் அனைத்துத் தரப்பினரும் வாங்கக் கூடிய ஒன்றாகவே இந்திய பங்குச்சந்தை தற்போது உள்ளது.
இது 1.00 புள்ளியை எட்டும்போது உலகச் சந்தையில் இது விலை உயர்ந்த பங்குகளாகக் கருதப்படும்.
அளவீடுகள்
சந்தை மூலதனம் மற்றும் ஜிடிபி அளவீடுகளில் 0.2-0.8 மத்தியில் இருக்கும் சந்தைகள் வளரும் சந்தைகளாகவும், 0.5-2.2 மத்தியில் இருக்கும் சந்தைகள் வளர்ந்த சந்தைகளாகவும் கருதப்படும்.
இந்திய சந்தையில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 500 கோடிக்கும் குறைவாக உள்ளது.
10 வருடம்
இந்திய சந்தை கடந்த 10 வருடத்தின் சராசரி அளவீடு 0.78 ஆகவும், அதிகப்படியாக 2007ஆம் ஆண்டு 1.48ஆகவும் உள்ளது.
மேலும் உள்நாட்டு நிறுவனங்கள் மீதான முதலீட்டில் ஜனவரி முதல் சுமார் 28 சதவீகம் வருமானத்தை அளித்துள்ளது. இதன் மூலம் 20 முன்னணி சந்தைகளில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
2 டிரில்லியன் டாலர்
இன்று நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.34 ரூபாய்.
1 டிரில்லியன் டாலர் எனில் 1,00,000 கோடி டாலர். இதனை ரூபாய் மதிப்பில் மாற்றும் போது 66.34 லட்சம் கோடி ரூபாய். 2 டிரில்லியன் எனில்.. அடேங்கப்பா.. 128,680,000,000,000 ரூபாய்.
இதுதான் இந்திய சந்தையின் மதிப்பு..!
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications