கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள் இன்று, மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் தொடங்கியுள்ளது.
இன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே ஏற்றத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் தொடக்கத்திலேயே மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 363 புள்ளிகள் அதிகரித்து, 44,245.50 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 101 புள்ளிகள் அதிகரித்து 12,960 ஆகவும் தொடங்கியது. சரி இப்போது எப்படி உள்ளது? என்ன காரணம் தொடர்ன்ய்து இப்படி புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றதே. வாருங்கள் பார்க்கலாம்.

அதெல்லாம் சரி தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றதே என்ன காரணம்? தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இன்று இந்திய சந்தைகள் கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது. அதுவும் வரலாறு காணாத உச்சத்தினை தொட்டு வருகின்றன.
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில், சில குறியீடுகள் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி லைஃப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக், இன்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ்.டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 63 புள்ளிகள் அதிகரித்து, 44586 ஆகவும், இதே நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து, 13,080 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமில்லாமல் 74.39 ரூபாயாக காணப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications