இந்திய பங்கு சந்தையானது 5 மாதத்திற்கு பிறகு கடும் வீழ்ச்சியினை இன்று சந்தித்துள்ளது. இது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி என இரண்டும் முறையே 1.5% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இது வரவிருக்கும் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி-க்கு மத்தியில் வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில் இந்திய பங்கு சந்தையானது இன்றும் கடும் வீழ்ச்சியினை சந்தித்தது.
இது வரவிருக்கும் ஆர்பிஐ மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டமும் முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.
ஆர்பிஐ இலக்கு
தொடர்ந்து பணவீக்கத்தினை குறைக்கும்பொருட்டு மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை இதுவரையில் அதிகரித்து வந்தது. எனினும் தற்போது ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு கீழாக பணவீக்கம் வந்துள்ள நிலையில், மீண்டும் அதிகரிப்பு இருக்குமா? என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளது.
பெடரல் ரிசர்வ் வங்கி இலக்கு
அமெரிக்காவின் மத்திய வங்கியானது பணவீக்கம் என்பது மென்மையடைத் தொடங்கியிருந்தாலும், இன்னும் இலக்கினை எட்டவில்லை. ஆக இது வரவிருக்கும் அமர்வுகளில் வட்டியினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இதுவும் இன்று சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு ஒரு காரணம் எனலாம்.
என்னென்ன பங்குகள் இன்று சரிவு?
குறிப்பாக வங்கி பங்குகள், ஐடி பங்குகள், மெட்டல், எனர்ஜி பங்குகள் மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகள் என பலவும் சரிவில் காணப்பட்டன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டன.
4வது நாளாக சரிவு
தொடர்ந்து 4வது நாளாக அழுத்தத்தில் காணப்படும் சந்தையானது, இன்று 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவினைக் கண்டது. சென்செக்ஸ் உணர்வுப்பூர்வமாக 60,000 என்ற லெவலை உடைத்துள்ளது. ஆக இது மேற்கோண்டு வரவிருக்கும் அமர்வுகளில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நிஃப்டி நிலவரம் என்ன?
இதே நிஃப்டி 17,600-க்கும் கீழாக முடிவடைந்துள்ளது. இதுவும் அக்டோபர் 19-க்கு பிறகு கீழாக முடிவடைந்துள்ளது. இன்று மட்டும் சென்செக்ஸ் 927.74 புள்ளிகள் அல்லது 1.53% சரிந்து, 59,744 புள்ளிகளாகவும், நிஃப்டி 272.40 புள்ளிகள் அல்லது 1.53% சரிவினைக் கண்டு, 17,554.30 புள்ளிகள் சரிவினைக் கண்டும் முடிவடைந்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு
இதே சென்செக்ஸ் 60000 புள்ளிகளுக்கு கீழாக சரிவினைக் கண்டுள்ள நிலையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பானது 3,87,228.19 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் ஐடிசி மட்டுமே ஏற்றத்தில் இருந்த ஒரே பங்காக இருந்தது. எனினும் இதுவும் கூட பெரியளவில் ஏற்றம் காணவில்லை எனலாம். இதே பஜாஜ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி இரட்டை பங்குகள் என்பது டாப் லூசர்களாகவும் இருந்தது. பஜாஜ் பைனான்ஸ் என்பது டாப் லூசராகவும் இருந்தது. இதே பஜாஜ் பின்செர்வ் பங்கு விலையானது 2.4% சரிவினைக் கண்டும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சியும் கிட்டத்தட்ட 2% சரிவினைக் கண்டுள்ளன. இதே எம் & எம் பங்கின் விலையானது 2.5% சரிவினையும் கண்டுள்ளது.
ரிலையன்ஸ் & அதானி குழும பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட் ஸ் பங்கு விலையும் 2.3% சரிவினைக் கண்டு, 2379 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி குழும பங்குகளும் ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு கடும் சரிவினைக் கண்டுள்ளன. இதற்கிடையில் இதன் சந்தை மதிப்பானது 60% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இது 25 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 7.55 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
எதிர்பார்ப்பு
இந்திய சந்தையில் உள்ள இந்த வீழ்ச்சியானது வரவிருக்கும் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரிக்கு மத்தியில் வந்துள்ளது எனலாம். இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பும் மேற்கோண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications