கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு இந்திய பங்கு சந்தைகள், இன்று சற்று சரிவினைக் கண்டு வருகிறது.
இன்று சந்தை ப்ரீ ஒபனிங்கில் சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. எனினும் தொடக்கத்திலேயே மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 18.30 புள்ளிகள் குறைந்து, 44,241.44 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 2 புள்ளிகள் குறைந்து, 12,984 ஆகவும் தொடங்கியது. இதற்கிடையில் 753 பங்குகள் ஏற்றத்திலும், 322 பங்குகள் சரிவிலும், இதே 74 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
என்ன காரணம்
அதெல்லாம் சரி கடந்த சில தினங்களாக தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், இன்று மட்டும் சரிவினைக் கண்டுள்ளது. இன்று மதியம் ஜிடிபி தரவுகள் வெளியிடப்பட உள்ளதால், அது சரிவினைக் காணலாம். இது சந்தைக்கு சாதகமாக இருக்காது. இதனால் சந்தைகள் சரியலாம் என்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இன்று வார இறுதி என்பதால், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்ய (புராபிட் புக்கிங்) செய்யலாம். இதனால் சந்தை சரிவினைக் கண்டு வருகின்றது.
சந்தைக்கு சாதகமான காரணிகள்
தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இன்று இந்திய சந்தைகள் கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது. அதுவும் வரலாறு காணாத உச்சத்தினை தொட்டு வருகின்றன.
இந்திய ரூபாய் மதிப்பு
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.76 ரூபாயாக அதிகரித்து காணப்படுகிறது. இது தொடக்கத்தில் 73.79 ரூபாயாக தொடங்கிய நிலையில், தற்போது சற்று ரூபாயின் மதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. முந்தைய அமர்வில் ரூபாயின் மதிப்பானது 73.88 ரூபாயாக தொடங்கியுள்ளது.
நிஃப்டி குறியீடு எப்படி உள்ளது?
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில், சில குறியீடுகள் தவிர, மற்றவை சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஈச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி லைஃப், பவரி கிரிட் கார்ப், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பவர் கிரிட் கார்ப், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச் சி எல் டெக், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 68 புள்ளிகள் குறைந்து, 44191 ஆகவும், இதே நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து, 12,977 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications